புதுச்சேரி : பல்கலை கழக மாணவர்களின் தேர்வை ரத்து செய்து மாணவர்களை கடந்த செமஸ்டர் தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்.!

புதுச்சேரி : பல்கலை கழக மாணவர்களின் தேர்வை ரத்து செய்து மாணவர்களை கடந்த செமஸ்டர் தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்.!

Update: 2020-07-13 04:18 GMT

பல்கலை கழக மாணவர்களின் தேர்வை ரத்து செய்து மாணவர்களை கடந்த செமஸ்டர் தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதுச்சேரியில் அரசின் உத்தரவுகளை மக்கள் கடைபிடிக்காமல் கூட்டமாக கூடுவதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும், இதனால் ஒரே பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

சட்டமன்ற கூட்டத்தை அதிக நாள் நடத்த வேண்டும் எதிர்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற கூட்டத்தை எத்தனைநாள் நடந்த வேண்டும் என சட்டமன்ற அலுவல் குழு தான் முடிவு செய்யும் என்றும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் அலுவல் குழு அதன் அடிப்பையில் முடிவு எடுக்கும் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி,

பல்கலை கழக மாணவர்கள் இறுதி தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் இது சாத்தியமில்லை என்பதால் மாணவர்கள் கடந்த செமஸ்டர் தேர்வில் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Similar News