இந்தியர்களின் டேட்டா இந்தியர்களுக்கே - பாதுகாப்பு குறித்து சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை...!

இந்தியர்களின் டேட்டா இந்தியர்களுக்கே - பாதுகாப்பு குறித்து சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை...!

Update: 2020-07-23 14:20 GMT

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் சமூக உடைகளுக்கு கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஜி20 டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ரவிசங்கர் பிரசாத், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பாதுகாப்பு மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார் என்றும் கூறினார்.

மேலும் உலகில் எங்கிருந்தாலும் டிஜிட்டல் தளங்கள் நாடுகளின் இறையாண்மை எப்போதும் பேணிக் காக்க வேண்டும். ஏனென்றால் அத்தகைய பொறுப்பும் பொறுப்புணர்வும் சமூக ஊடகங்களில் இருக்கிறது.எந்த ஒரு தனிமனித சுதந்திரமும் யாருக்கும் பாதிப்பு வராமல் இருக்க பாதுகாப்பு மிகவும் அவசியம் என்று மேலும் தெரிவித்தார்.

இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் டிக் டாக், மற்றும் 58 செயலிகளின் தடைதான். ஏனென்றால், அவைகள் எல்லாம் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் அது தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனம் மற்ற நாடுகளில் டேட்டாவை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று கூறி வந்தது, இதனால் பல பாதுகாப்பின்மை ஃபேஸ்புக்கில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

பயனாளர் டேட்டாவை கையாள்வதில் ஃபேஸ்புக் ஏற்கனவே ஒரு சந்தேகத்திற்குரிய பதிவைக் கொண்டுள்ளது, மேலும் ஏதேனும் புதிய ஊழல் வெளிவந்தால், இந்திய அரசு பேஸ்புக்கிலும் தடை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளது அந்நிறுவனம். 120 பயனாளர்களை கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் தடை செய்யப்பட்டால் அது பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் இழப்பாக இருக்கும். பயனாளர்கள் உபயோகப்படுத்தும் டேட்டாவை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஒரு சமூக ஊடகம் ஆக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல செய்திகளை உள்ளூரில் இருந்து தயாரிக்கப்படும் திட்டத்திற்கு பிறகும் ஆதரவினால் ஃபேஸ்புக் நிறுவனம் மற்றும் பல இதர நிறுவனங்கள் பாதுகாப்பு தன்மையுடன் இருக்க வேண்டும் அல்லது தடை செய்யப் படுவார்கள் அதனால் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Similar News