சிங்கப்பூர் அமைச்சரவையில் ஐந்து தமிழர்களுக்கு பதவி - அசத்திய பிரதமர் லீ சியென் லூங்.!

சிங்கப்பூர் அமைச்சரவையில் ஐந்து தமிழர்களுக்கு பதவி - அசத்திய பிரதமர் லீ சியென் லூங்.!

Update: 2020-07-29 12:41 GMT

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் 93 எம்பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை அன்று புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். அதில் 37 அமைச்சர்களில் 9 பேர் பெண்களும் உள்ளனர். இந்த வருடம் இஸ்தானா, நாடாளுமன்றம் இரண்டு இடங்களில் பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

இந்த விழாவை அதிபர் ஹலீமா உரையாற்றி துவங்கி வைத்தார். இதனை அடுத்து சிங்கப்பூரின் பிரதமராக லீ சியென் லூங் பதவி ஏற்றார். அவரை அடுத்து துணைப் பிரதமராக ஹெங் சுவீ கியெட், நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றார். இந்நிலையில் பிரதமர் லீ சியென் தலைமையிலான அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றார்.



அந்த ஐந்து தமிழ் அமைச்சர்களின் துறைகள்:

தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் மற்றும் சமுதாய கொள்கைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.

கா சண்முகம், எஸ் ஈஸ்வரன் மற்றும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் சென்ற இருந்த பதிவிலேயே தொடர்ந்து இருக்கின்றனர்.

இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகவும் மற்றும் தேசிய வளர்ச்சி, நிதி ஆகிய இரண்டாவது அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். 

Similar News