சோறு‌ தான் முக்கியம்! மணமேடையில் லேப்டாப்பும் கையுமாக வேலையில் பிஸியான பெண்

சோறு‌ தான் முக்கியம்! மணமேடையில் லேப்டாப்பும் கையுமாக வேலையில் பிஸியான பெண்

Update: 2020-07-06 12:12 GMT

கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் மக்களின் வாழ்க்கை முறையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. பல மாதங்களாக தொழில்களும் வணிகங்களும் முடங்கிப் போய் இருப்பதால் உடல் உழைப்பு தேவைப்படாத பணிகளுக்கு வீட்டிலிருந்தே பணி புரியுமாறு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்வது ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்த சிலருக்கு வேலைப் பளு அதிகரிப்பு, வீட்டில் வேலை செய்வதற்கு தகுந்த சூழல் இன்மை, அதிக வேலை வாங்கும் உயரதிகாரிகள் ‌அல்லது திறமையின்மை என பல காரணங்களால் இந்த ஊரடங்குக் காலம் கஷ்ட காலமாகி விட்டது.

இந்த சமயத்தில் திருமணம்‌ நடத்துவதே பெரிது. அப்படியே நடத்தினாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள், நண்பர்களுடன் மிக எளிமையாகக் தான் நடத்த வேண்டியதிருக்கும். அப்படி நடத்தப்பட்ட ஒரு திருமணத்தில் கூட முழுமையாக வாழ்வில் ஒரு முறை நடக்கும் நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்தை அனுபவிக்காமல் மண் மேடையிலும் தீவிரமாக லேப்டாப்பை தட்டிக் கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார் இந்த மணப்பெண்.

கல்யாண வீட்டுக் கோலாகலங்களுக்குத் தான் செவி சாய்க்கவில்லை என்றால் கணவர் வந்து அருகில் அமரும் போது கூட அவரை என்னவென்று கேட்கவில்லை என்பது தான் கொடுமை. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பற்றி பல்வேறு விதமான கருத்துக்களும் நிலவுகின்றன.

"நீங்கள் வேலைப் பளுவால் அழுத்தத்திற்கு உள்ளாவதாக நினைக்கிறீர்களா? இந்த வீடியோவைப் பாருங்கள்" என்ற கமெண்டுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

Similar News