தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டேனா? எனக்கே தெரியாதே? - அவசரமாக மறுப்பு தெரிவித்த ஜூலி..!

தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டேனா? எனக்கே தெரியாதே? - அவசரமாக மறுப்பு தெரிவித்த ஜூலி..!

Update: 2020-08-02 12:31 GMT

ரகசிய திருமணம் செய்து கொண்டதை பிக் பாஸ் ஜூலி இது உண்மை இல்லை என அவசரமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஜூலி. அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்-1 கலந்துகொண்டார்.பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஆக பணியாற்றினார். தற்போது ஜூலி சில படங்களில் நடித்து வருகிறார். பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து தற்போது நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஜூலி பற்றி செய்திகள் வந்த மையமாகவே இருக்கின்றன. அந்த செய்தி அவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகவும் சோஷியல் மீடியாவில் பரபரப்பான தகவல் வந்து கொண்டிருக்கின்றன. இதை பார்த்து ஜூலி இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் இந்தச் செய்தி உண்மையானது இல்லை எனவும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.இதுபோல் வரும் செய்திகள் தன் பெயரைக் கெடுப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.




 


Similar News