பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந்தியா கொடியுடன் சுதந்திர தின வாழ்த்து - என்ன நேர்ந்தது?

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந்தியா கொடியுடன் சுதந்திர தின வாழ்த்து - என்ன நேர்ந்தது?

Update: 2020-08-03 05:15 GMT

பாகிஸ்தானில் இருக்கும் பிரபல செய்தி தொலைக்காட்சியில் திடீரென்று சில நிமிடம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்ததில் அந்த தொலைக்காட்சியில் இந்தியாவின் தேசியக் கொடி ஒளிபரப்புயாகியது என தகவல் வெளியாகி வருகிறது.

பாகிஸ்தானின் டான் எனும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்புயாகி உள்ளது. அந்த சமயத்தில் திடீரென்று இந்தியாவின் தேசியக்கொடி ஒளிபரப்பு ஆனது உடன் சுதந்திர தின வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒளிபரப்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.


மேலும், ஹேக்கிங் செய்யப்பட்டதை தொடர்ந்து, தொலைக்காட்சி நிர்வாகம் இதை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

  

Similar News