உத்தரகண்ட் : வெள்ளைப் பெருக்கில் பித்தோராகக் மாவட்டம் - மீட்புப் பணியில் இந்திய இராணுவம்.!

உத்தரகண்ட் : வெள்ளைப் பெருக்கில் பித்தோராகக் மாவட்டம் - மீட்புப் பணியில் இந்திய இராணுவம்.!

Update: 2020-08-01 05:51 GMT

உத்தரகண்ட் மாநிலத்தின் எல்லைப்பகுதியிலுள்ள பித்தோராகக் மாவட்டத்தில் கடும் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டதையடுத்து, மீட்புப்பணிக்கு இந்திய ராணுவம் விரைந்து சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் திடீர் கடும் மழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல கிராமங்கள் துண்டிக்கப்பட்ட பிறகு, உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக முன்சியரி மற்றும் தர்ச்சுலா பகுதிகளில் ராணுவத்தை சேர்ந்த மீட்புப் படையினர் வந்து சேர்ந்தனர்.

"மூன்று கிராமங்களில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்டெடுப்பதற்காக இந்திய மீட்புப்படையினர் விரைந்தனர்." என இராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்.

முன்சியாரி பகுதியிலுள்ள நளாஸ் மற்றும் கோரி கங்கை நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல கிராமங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

ராணுவ மீட்புப் படையினரின் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று இராணுவம் அறிவித்துள்ளது.

மாவட்டங்களில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்சியாரி மற்றும் தர்ச்சுலா பகுதிகளில் 24 மற்றும் 179 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. மேலும் லும்தி, ஜராஜிப்லி, மோரி, காலாட்டி, பங்கபானி, பரம், சோரி பாகர், பனபாகர் உள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மழையால் சேதமடைந்தன.

முன்சியாரி - ஜராஜிப்லி இணைக்கும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் 12 கிராமங்கள் தலைமையகத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. இந்த சாலைகள் சீனா எல்லையில் இருக்கும் கிராமங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அழிவைக் கண்ட பின்பே இந்திய ராணுவ படையினர் மீட்புப்பணிக்காக அழைக்கப்பட்டனர்.



source: https://swarajyamag.com/insta/uttarakhand-heavy-rains-wreak-havoc-in-pithoragarh-district-indian-army-rushed-in-to-carry-out-rescue-operations

Similar News