இந்துக்கள் தமிழர்களா?

இந்துக்கள் தமிழர்களா?

Update: 2019-10-06 09:48 GMT

தமிழர்கள் இந்துக்கள் இல்லை - இந்த பதத்தை சமீப காலங்களில் நீங்கள் அதிகமாக கேட்டிருக்கலாம். இக்கேள்வியை அதிகம் முன்வைப்பது தமிழ் தேசியவாதிகள்(போலிகள்?!) என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள் தான். அதற்கு தமிழக மக்களை மறைமுகமாக ஆற்றிய(ஆற்றும்) எதிர்வினையை பின்னர் பார்ப்போம்.


இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஏன் இவர்கள் இதே வாதத்தை கிறிஸ்தவ, முஸ்லிம்களை தமிழர்கள் இல்லை என்று முன்வைப்பதில்லை என்று! பதில் தெரியவில்லை எனில் உங்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம்.


தமிழ் தேசியவாதிகளை போலிகள் என்று நான் சொல்லுவதன் காரணம் இது தான். என்னதான் அவர்கள் இந்துத்துவத்தை எதிர்த்தாலும் இறுதியில் அந்த நதி வந்து சேர வேண்டிய கடல் இந்திய தேசியம் தான்(எ.கா.மகாராஷ்டிராவில் சிவசேனை). ஆனால் அந்த நதியை அங்கே கலக்கவிடாமல் தடுக்கும் லாபியின் கைகளில் தான் தமிழ் தேசியம் உள்ளது.


முப்பாட்டன் முருகனையும் மாயோனையும் ஏற்கும் நாம் தமிழர் கட்சியினரை ஏன் பிற நில தெய்வங்களான(மருதம்,நெய்தல்,பாலை) கொற்றவை, வருணன், இந்திரன் ஆகியோரை முன்வைத்து வழிபட அந்த லாபி அனுமதிப்பதில்லை.


இங்கேயே உங்களுக்கு அந்த லாபி எத்தகையது யார் இயக்குகிறார் என்று புரிந்திருக்கும்.


ஏன் இந்த வாதம் என்பது மோகன் சி லாசராஸ், எஸ்ரா சற்குணம், ஜெகத் காஸ்பர் போன்ற பாதிரியார்களின்  பேச்சை கேட்டால் புரியும். 


இந்திரனுக்கும் வருணனுக்கும் வேத கால தமிழன் போல யாகம் செய்வோம் அதுவே நம் வழிபாடு என்று அவர்கள் ஒத்துக்கொள்வார்களா?


முன்னோரை வழிபடுவதே தமிழர் மரபு என்று பேசும் அவர்கள் முன்னோரை வழிபடும் தமிழர்களை இந்துக்கள் இல்லை என்று கூறிவிட்டு நம் முப்பாட்டனை மாயோனை வாழ்ந்ததாக கூட ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவ முஸ்லிம்களின் வழிபாடு தவறு என ஏன் பேசுவதில்லை என்ற கேள்வியை தமிழக இந்துக்கள் அந்த லாபியிடம் கேட்க வேண்டும்.
1)தங்கள் முன்னோர்களை வணங்கும் இந்துக்கள் தமிழர்களா?
2) பன்மைத்துவ மரபு வழி வராத ஒற்றை இறைவன் வழிபாடு பேசும் ஆபிரகாமிய சமயங்களை பின்பற்றுபவர்கள் தமிழர்களா?
முதலாவதை தேர்ந்தெடுத்தால் நீங்கள் தமிழ் தேசியவாதி இரண்டாவதை தேர்ந்தெடுத்தால் நீங்கள் அந்த லாபியிடம் விலை போய்விட்ட போலி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனாலும் இந்த மூடர்களின் வாதத்திற்கு தமிழர்களின் பதிலை புரட்டாசி சனி, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் தாங்கள் கோவில்களில் கூடுவதன் மூலம் சராசரி தமிழன் சொல்கிறான்.
ஆனால், அனைத்து அரசியல் கட்சிகளும் பதில் சொல்வது எப்போது?


Similar News