ஊரடங்கு எதிரொலி.. கிருஷ்ணகிரி காட்டில் முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்.!

ஊரடங்கு எதிரொலி.. கிருஷ்ணகிரி காட்டில் முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்.!

Update: 2020-04-08 04:46 GMT

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகின்ற காரணத்தினால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் கடைகளுக்கு சென்று வருவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முடிவெட்ட முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இதனால் கிருஷ்ணகிரி அருகே உள்ள மேகலசின்னம்பள்ளி என்ற காட்டில் சவரத்தொழிலாளி ஒருவர் பொதுமக்களுக்கு முடிவெட்டி விடுகின்றார்.

முககவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி செய்வதாக கூறியுள்ளார்.

மேலும், எங்களை போன்று பாதிக்கப்பட்டுள்ள சவரத்தொழிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் அவர்களின் குடும்பம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News