மனிதர்களை கொல்ல சீன ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? திடுக்கிடும் தகவல்கள்!

மனிதர்களை கொல்ல சீன ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? திடுக்கிடும் தகவல்கள்!

Update: 2020-04-20 03:14 GMT

இந்த கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று பல்வேறு வகையான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்கச் செய்துள்ள இந்த கொடிய வைரஸின் தோற்றம் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலையில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ரஹ்மான் மாலிக் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டர்ரஸிடம் 7 குறிப்புகளுடன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் வைரஸ் தோன்றிய இடத்தின் புவி குறியீடு, முதலாவது நோய் தொற்று பாதித்த நபர், வைரஸின் தன்மை கண்டறிவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து துவங்கி உலக அளவில் பாதித்த சார்ஸ் கிருமி பரவலுக்கு பின்னர் நோய் தொற்று முன்னெச்சரிக்கை & கட்டுப்பாடு ஆய்வகம் பிரஞ்சு தொழில்நுட்பத்தில் 2004-ல் துவங்கப்பட்டது. தற்போது உலக நாடுகள் பார்வை இந்த வூகான் உயிரியல் பாதுகாப்பு ஆய்வகத்தை நோக்கி திரும்பி உள்ள நிலையில் அங்கு மற்றொரு இரண்டாவது ஆய்வகமாக வூகான் நகராட்சி நோய் தடுப்பு மையத்தில் (Wuhan Municipal Centre for Disease Control) இதே போன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது வெளியாகியுள்ளது.

2004-ல் ஆய்வகத்தில் இருந்து சார்ஸ் கிருமி வெளி கசிந்து ஒருவர் பலியாக 9 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்விசயத்தில் சீன அரசு தவறை உறுதிப்படுத்தும் விதமாக 5 அதிகாரிகளை தண்டித்தது.

யுனான் மாகாண குன்மிங் குகைகளில் இருந்து ஆயிர கணக்கான குதிரைவாலி (Horseshoe) வௌவால்களை பிடித்து ஆராய்ச்சி செய்வதாகவும் குறிப்பாக 2011 ஏப்ரல் முதல் 2015 அக்டோபர் வரை மட்டும் 10 முறை வௌவால்களை பற்றி ஆராய்ச்சி செய்தது எனவும் தற்போது பரவி வரும் வைரஸ் கிருமி 2013-ல் வூகான் நுன்னுயிர் ஆய்வகத்தில் வௌவால்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததை போல் 96.2% ஒத்து இருப்பதாக உயரிபாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் எப்ரிகில் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக 2018 ஏப்ரலில் "Fatal swine acute diarrhoea syndrome caused by an HKV2 related corona virus of bat origin" என்ற கட்டுரை வெளியாகியுள்ளது.

இதை மறுக்கும் விதமாக பல ஆண்டுகளாக வௌவால்களை ஆராய்ச்சி செய்து சீனாவின் வௌவால் பெண்மணி என்று அழைக்கப்படும் ஆய்வகத்தின் துனை இயக்குனர் ஷி சென்ங்லி இந்த கொரானா வைரஸ் ஜூனாடிக் (zoonotic) என்று அழைக்கப்படும் மருகத்திடம் இருந்து மனிதனுக்கு பரவும் கிருமி என்றும் ஆய்வக ஆராய்ச்சியில் இருந்து கிருமி வெளியேற வாய்ப்பு இல்லை என்று கூறினாலும் ஆய்வக இயக்குனர் யான்யி வாங் ஆய்வக ஊழியர்கள் எந்தவொரு தகவல்களையும் யாரிடமும் பகிர கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை மேலும் உறுதிபடுத்த ஜனவரி 14-ஆம் தேதி துணை இயக்குனர் ஷி தனது சக ஊழியர்களிடம் புது வைரஸ் பரவ போகிறது என்று இணைய கலந்துரையாடலில் கூறியுள்ளார். இதே நாளில் தான் ஐக்கிய நாடுகளின் சபை கொரோனா மனிதர்களிடைய தொற்று நோயாக பரவும் என்று அறிவித்தது சந்தேகத்திற்குரியது. அதுவரை இந்த கிருமியானது மனிதர்கள் இடையே பரவாது என்று கூறி வந்தது. உண்மையை வெளிக்கொணர முன்வந்த 8 மருத்துவர்களை சீனா பணியிடை நீக்கம் செய்து உள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக்கேல் தெரிவித்தார்.

அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் கூறுகையில் டிசம்பர் மாதம் முழுக்க நோய் பாதிப்பை மறைத்து ஜனவரி மாதத்தில் ஆய்வகத்தின் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஜனவரி 7-ஆம் தேதி வூகான் மிருக உணவு சந்தை மீது பழியை சுமத்தி உள்ளது என்றார்.

ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க ராணுவத்தின் மீது பழியை சுமத்தி சீனா நோய் குறித்த எந்த விபரங்களையும் பகிர மறுத்தது. ஷாங்காயை சேர்ந்த ஆய்வாளர் செய்த ஆராய்ச்சிகள் தகவல் மட்டுமே வெளி உலகில் பகிரப்பட்டது.

மேலும் அமெரிக்க குற்றச்சாட்டை வலுவிழக்கும் வகையில் 229.5 கோடி ரூபாய் மதிப்பிலான வௌவால் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா பணம் அளித்தது என்று சீனா தகவல் வெளியிட்டது. 2017-ல் "Discovery of rich gene pool of bat sars related corona viruses provides new insights into the origin of SARS Corona virus" என்ற ஆய்வு முடிவு அமெரிக்க உதவியில் நடைபெற்றதாக சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் சீனாவில் மிருகங்களை பாதிக்கும் சோதனைகளை நடத்தி பின்னர் அதே மிருக உடல்களை வூகான் உணவு சந்தையில் விற்பதாக வொயிட் கோட் வெஸ்ட் பிராஜெக்ட் தலைவர் ஆன்டனி பெலோட்டி குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக பிரான்சின் நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் (Luc Montagnier) தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாகவும் இவற்றில் எய்ட்ஸ் & மலேரியா கூறுகள் இருக்கலாம் என்று பிரெஞ்ச் அறிஞர் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் என்ற நோயைக் கண்டுபிடித்ததற்காக 2008-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வூகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நுன்னுயிர் ஆய்வகம் சீனா கூறுவதை போல் 4 அடுக்கு பாதுகாப்பு கிடையாது என்றும் 2 அடுக்கு பாதுகாப்பு மட்டுமே உண்டு என்று உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எப்ரைட் தெரிவித்தார்.

2018-ல் கார்டியன் பத்திரிகையில் அமெரிக்க தூதரக பணியாளர்கள் இந்த ஆய்வகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் பயிற்சி இன்றி திறன் இல்லாத ஊழியர்கள் ஆராய்ச்சியை கையாளுவதாக வெளியிட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் சீனாவில் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருப்பது குறித்து தீவிரமாக விசாரிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளதை அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ உறுதிப்படுத்தினார்.

Similar News