வாகன இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அதிரடி!

வாகன இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அதிரடி!

Update: 2020-04-16 10:50 GMT

கோவிட் – 19 ஊரடங்கு நேரத்தில், சுகாதாரம் மற்றும் மோட்டார் வாகன (மூன்றாம் தரப்பு) பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீடுகளைப் புதுப்பிப்பதில் சிரமத்தை எதிர்க்கொள்வதால், அவர்கள் தங்கள் பாலிசியை புதுப்பிப்பதற்கு மே 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், தடையின்றி கப்பீட்டுதாரர்கள் தங்கள் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள முடிவதுடன், இந்த கருணைக் காலத்தில் தங்களின் உரிமை கோரல்களையும் எளிதில் இடரின்றிப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பாணையில், 2020 மார்ச் 25-ஆம் தேதியில் இருந்து 2020 மே 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், சுகாதாரம் மற்றும் மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க வேண்டிய பாலிசிதாரர்ரகள், இந்த கொரானா வைரஸ் நோய் (கோவிட் – 19) பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் உரிய நேரத்தில் தங்கள் பாலிசியைப் புதுப்பிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆகியோர் 2020 மே 15-ஆம் தேதிக்குள் தங்கள் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோட்டார் வாகன மூன்றாம் தரப்புக் காப்பீடு முடிவடையும் தேதியில் இருந்தே அவர்கள் தங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும், இந்த கருணைக் காலத்தில் உரிமைகோரல்கள் இருந்தாலும், அதையும் அவர்கள் பெற முடியும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News