தி.மு.க. செந்தில்பாலாஜியை வெளுத்து வாங்கிய கரூர் ஆட்சியர் அன்பழகன்.!

தி.மு.க. செந்தில்பாலாஜியை வெளுத்து வாங்கிய கரூர் ஆட்சியர் அன்பழகன்.!

Update: 2020-04-18 05:25 GMT

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கும் அரவகுறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜிக்கும் ஏழம்பொருத்தம் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது

செந்தில்பாலாஜி சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும் போது கரூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை சரிவர செய்யவில்லை என்றும் முக கவசம் கிருமிநாசினிகள் பற்றாகுறை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

எனது தொகுதி நிதியில் இருந்து முககவசம் கிருமிநாசினிகள் மருத்துவ கருவிகள் வாங்க எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தேன் ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை அந்த நிதியை பயன்படுத்தவில்லை என குற்றம்சாற்றியிருந்தார்.

நேற்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனா நோய் தடுப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது.

முககவசம், கையுறை, பாதுகாப்பு கவசம் கிருமிநாசினிகள் தெளிக்கும் இயந்திரங்கள் அனைத்தும் போதிய அளவில் உள்ளது மேலும் தேவைக்கும் மிகுதியான முககவசம் கையிருப்பு உள்ளது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோயின் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது பொது மக்கள்அச்சம் அடையவேண்டாம்.

திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி சொல்வது போன்று நோய் தடுப்பு பணிகளில் எந்த தட்டுபாடும் இல்லை எம்.எல்.ஏ நிதியை செந்தில்பாலாஜி நிர்வாக ஒப்புதலுக்கு அளிப்பதற்கு முன்பே தமிழ் நாடு அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான முக கவசங்கள் மருந்து பொருட்கள் பெறப்பட்டது.

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவம் போன்ற சில செலவினங்களுக்கு பயன்படுத்தும் போது அரசின் விதி முறைகளை பின்பற்றவேண்டியுள்ளது.

எனவே அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை மாவட்ட நிர்வாகமே நேரடியாக பயன்படுத்த முடியும் இது தான் விதிமுறையாக உள்ளது.

கொரோனா நோய் தடுப்பு பணி என்பது தமிழக அரசின் பேரிடர்மேலாண்மை விதிகளின் படி செய்யப்படும் அவசர பணியாகும், எனவே மருத்துவ பணிகளுக்கு என்று சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த நிர்வாக ரீதியாக பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி அரசிடம் ஒப்புதல் பெற்றபின்னர் தான் பயன்படுத்த முடியும் என விளக்கமளித்தார்.

மக்களிடம் தவறான தகவலை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த செந்தில்பாலாஜியின் பாட்சா பலிக்க வில்லை மேலும் எம்.எல்.ஏ கொடுத்த நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்ற பொய் பிரசாரத்தையும் ஆட்சியர் அன்பழகன் முறியடித்தார்.


Similar News