கொரோனா இறப்பை மாரடைப்பு என ஜோடித்து ஐபோனுக்கு விலை போன மருத்துவரால் முன்னாள் அமைச்சர் உட்பட கீழக்கரை கிராமமே முடங்கியது!

கொரோனா இறப்பை மாரடைப்பு என ஜோடித்து ஐபோனுக்கு விலை போன மருத்துவரால் முன்னாள் அமைச்சர் உட்பட கீழக்கரை கிராமமே முடங்கியது!

Update: 2020-04-08 05:45 GMT

தொழில்ரீதியாக தாய்லாந்து மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று கடந்த மாதம் திரும்பிய இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஜமால் முகம்மது எனும் 71 வயது தொழில் அதிபரை சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த மருத்துவர்கள் சென்னையில் தனது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என முத்திரை குத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ஆனால், சளி மற்றும் கடுமையான இருமல் மற்றும் மூச்சுப்பிரச்சனையால் அவதிப்பட்ட ஜமால் முகம்மது ஏப்ரல் 2-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அடுத்த 2 மணி நேரத்தில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜமால் முகமது பலியானதாக அந்த செய்தி குறிப்பு கூறுகிறது.

அதில் மேலும் சொல்ல்ப்பட்டு இருப்பதாவது கொரோனா ஆய்வு முடிவு வருவதற்கு முன்பாக வழக்கறிஞரான ஜமாலின் மகன், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆர்.எம்.ஓ ரமேஷிடம் ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அவரது ஒத்துழைப்புடன், ஜமாலின் சடலத்தை சென்னையில் இருந்து வேன் மூலம் கீழக்கரைக்கு கொண்டு சென்று வழக்கம் போல அடக்கம் செய்துள்ளனர்.

மறு நாள் ஜமால் முகமது கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு உறுதிபடுத்தியதை தொடர்ந்து, இறுதி சடங்கில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 300 பேர் வீட்டிலேயே தனித்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜமால் முகமதுவின் மகன்களான கஜாமுஜிபூர், அல்லாபிச்சை ஆகியோர் மீது கொரோனா குறித்த உண்மையை மறைத்து 144 தடைஉத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு நோய் தொற்று ஏற்படும் நிலையில் நடந்து கொண்டதாக கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்க கூடும் என்ற அச்சத்தால் அவர்களை கைது செய்யாமல் வீட்டில் தனித்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையெல்லாம் அனுபவிக்கும் கீழக்கரை மக்கள் அரசுக்கு ஒத்துழைக்காத ஜமாலும் அவரது குடும்பம் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கொந்தளிக்க தொடங்கி இருக்கின்றனராம்.

Similar News