தென் கொரியாவில் கொரோனா தொற்று பரவ காரணமான ஷின்சியோஞ்ஜி சர்ச்!

தென் கொரியாவில் கொரோனா தொற்று பரவ காரணமான ஷின்சியோஞ்ஜி சர்ச்!

Update: 2020-04-07 12:07 GMT

சீனாவிற்கு அடுத்து சீன வைரஸ் கிருமியான கொரோனா நோய் தென் கொரியா நாட்டை பாதித்தது. நோயின் தாக்கத்தை அறியாமல் தொடக்கத்தில் சீனாவிற்கு முக கவசத்தை வழங்கியது தென் கொரியா.

ஆலிவ் மரம் என்ற கிருத்துவ பிரிவில் இருந்து பிரிந்து லீ மேன் ஹீ என்பவரால் 14 மார்ச் 1984-ல் துவங்கப்பட்ட ஷின்சியோஞ்ஜி பிரிவை தென் கொரியாவில் 2.3 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். 20 நாடுகளுக்கு மேல் கிளைகளை கொண்ட இந்த பிரிவை சீனாவில் 20 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். ஷின்சியோஞ்ஜி என்பதின் பொருள் புதிய சொர்க்கம் மற்றும் பூமி.

ஜனவரி 20-ல் தென் கொரியாவில் முதல் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 7-ஆம் தேதி ஷின்சியோஞ்ஜியை சேர்ந்த நபர் 31-வது நோய் தொற்று பாதித்த நபராக அறியப்பட்ட நிலையில் அவர் பிப்ரவரி 20-ஆம் தேதி தன்னை சிகிச்சைக்கு உட்படுத்தி கொண்டார்.

சீயோலில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் டேகு என்ற தென் கொரியாவின் 4-வது நகரத்தில் 8 தளங்களை கொண்ட மிக பெரிய பிராத்தனை கூடத்தில் 4-வது தளம் திருமணமான பெண்களும், 7-வது தளம் திருமணமான ஆண்களும், 8-வது தளம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த பிரிவில் எத்தனை நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் பிராத்தனையில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. மேலும் பிப்ரவரி 2-வது மற்றும் 3-வது வார பிரார்த்தனை கூட்டத்தில் முக கவசத்தை அணிந்து வர தடை விதித்து மிகவும் நெருக்கமாக நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நடைபெற்றது.


இந்த பிராத்தனை கூட்டத்தில் கலந்துக் கொண்ட நபர்களிடம் இருந்து 60 சதவீதத்திற்கும் மேல் நோய் தொற்று பரவியது. இந்த பிரிவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை மறைத்தும், பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் தகவலை தென் கொரியா அரசிடம் தெரிவிக்காமல் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்தது.

அரசின் தீவிர நடவடிக்கை மூலம் 2 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தென் கொரியாவில் இறப்புகளின் எண்ணிக்கை உயர இந்த கிருத்துவ பிரிவின் நிறுவனர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் தென் கொரியா மக்களிடம் பொது வெளியில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிலையிலும், அந்த கிருத்துவ பிரிவின் மீது பொது மக்களின் கோபம் குறையாமல் இருக்கிறது.

Similar News