பெரியார் கொள்கைக்கு மூடுவிழா! “எல்லோரும் இந்து கோயிலுக்கு செல்வோம்” - அழைக்கிறார் வைகோ! வைரலானது வீடியோ!!

பெரியார் கொள்கைக்கு மூடுவிழா! “எல்லோரும் இந்து கோயிலுக்கு செல்வோம்” - அழைக்கிறார் வைகோ! வைரலானது வீடியோ!!

Update: 2019-09-18 04:56 GMT


சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ம.தி.மு.க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கடவுள் மறுப்பு என்ற ஈவேராவின் கொள்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அனைவரையும் இந்து கோயிலுக்கு வருமாறு அழைத்தார்.


அதுமட்டுமல்லாமல், அவர் தனது குடும்பத்தினர், சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு கோபுரம் கட்டி வருவதாகவும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.


இதுதொடர்பாக வைகோ பேசியதாவது:-


நான் காஞ்சி கோயிலுக்கு போனேன். பல்லவர்கள் காலத்து கோயில்களைக் கண்டேன். சிற்பங்களின் அதிசயங்களைக் கண்டேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போனேன். அந்த சிற்பங்களை கண்டு அதிசயித்தேன்.


கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு போனேன். அங்குள்ள சிற்பங்களைப் போல உலகில் எங்கும் சிற்பங்களே கிடையாது. ராஜராஜ சோழன் கட்டுவித்த தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு போனேன். நான் பொன்னம்பலம் போனதில்லை. போக திட்டமிட்டுள்ளேன்.


நம்முடைய கலை பொக்கிஷங்கள், நம்முடைய கோயில்கள். அந்த கோயில்களுக்கு எல்லோரும் செல்வோம்.


மசூதிக்கு போகிறவர்களையும் வாழ்த்துகிறேன். ஜெப கூடங்களுக்கு போகிறவர்களையும் வாழ்த்துகிறேன். கோயில்களுக்கு போகிறவர்களையும் வாழ்த்துகிறேன்.


நீ மாறுபட்டுவிட்டாயா பெரியாரிடமிருந்து? நீ பழைய திராவிட கொள்கையில் இருந்து விலகிவிட்டாயா? கேள்வி வரும். எனக்கு தெரியும். ஆழ்ந்து சிந்தித்து தான் இதை சொல்கிறேன்.


நாற்பதுகளில் பேசியதை அண்ணா, அறுபதுகளில் பேசவில்லையே! ஐம்பதுகளில் பேசியதை அண்ணா அறுபதுகளில் பேசவில்லையே! யோசிக்க வேண்டும் நீங்கள்.


உனக்கு நம்பிக்கை இல்லையா? நீ கோயிலுக்கு போகாதே. கோயிலுக்கு போகிறவர்களை ஏன் கேலி பண்ணுகிறாய்? அவன் இஷ்டம். 99 சதவீதம் பேர் கோயிலுக்கு போகிறார்கள்.


நாங்கள் எங்கள் ஊரில் எங்கள் பாட்டனார் கட்டிய சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக கோபுரம் கட்டி வருகிறோம்.


எங்கள் ஊர் பிள்ளையார் கோயில்தான், தமிழ்நாட்டிலேயே பழமையான பிள்ளையார் கோயில். அதற்கு கோபும் கட்டி கும்பாபிஷேகம் வைத்தோம்.




https://twitter.com/thoppur/status/1173914136318595073



இவ்வாறு வைகோ பேசினார்.
வைகோவின் இந்த பேச்சு அடங்கியவீடியோ வைரலாக பரவி வருகிறது. 
மேலும் கி.வீரமணி போன்ற இந்து மதத்தை மட்டுமே கேலிசெய்துவரும் இந்துமத விரோதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் மண் பெரியார் மண் என்று மக்களை ஏமாற்றி வந்த கும்பல்களுக்கு இது பேரடியாக அமைந்துள்ளது.
இதுவரை இந்து மதத்தை விமர்சித்து பேசி வந்த வைகோ, இப்போது இந்து கோயில்களுக்கு செல்வோம் என்று அழைக்கிறார், கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம் என்கிறார். எனவே வைகோ, இனிமேல் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.


Similar News