"எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் நடந்துக்கோங்க" - ஸ்டாலினை விளாசி தள்ளிய முதல்வர்!

"எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் நடந்துக்கோங்க" - ஸ்டாலினை விளாசி தள்ளிய முதல்வர்!

Update: 2020-04-17 14:22 GMT

சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து குற்றம் சொல்லி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனத்தை பொருட்படுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.

கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம், உயிரோடு விளையாடுவது சரியல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்றால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், தினமும் அறிக்கை விடுவது, அரசை குற்றம் சொல்வது, அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் குடும்பத்தை விட்டு தன் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் குற்றம் சொல்லும் நேரமா இது? உயிரைக் காக்க வேண்டிய நேரமிது அதைக் காப்பதற்கு வழிமுறை சொன்னாள் பரவாயில்லை அதை விட்டு, விட்டு! அனைத்து விஷயத்திலும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் என்ன பொருத்தமாக இருக்கும் என மு.க ஸ்டாலினை, முதலமைச்சர் கடுமையாக சாடினார்.

மேலும், மருத்துவ வல்லுனர்கள் சொல்லக்கூடிய ஆலோசனைப்படி அரசு நடந்தால் மட்டும் தான் நோயை கட்டுப்படுத்த முடியும், அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் என்ன சொல்ல முடியும் அவர்கள் என மருத்துவர்களா! இரு மாநில பிரச்சனையா! நீர் பிரச்சனையா! அப்பொழுது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி அதில் ஒரு முடிவு எடுத்து அதை செயல்படுத்த வேண்டும், தற்பொழுது வந்திருக்கக் கூடிய பிரச்சனை முழுக்க மருத்துவ விஷயம் சார்ந்தே உள்ளது ஆகையால் அரசு மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறதோ அதை தான் செய்ய முடியும், அதைதான் அரசு செய்து கொண்டிருக்கிறது என கூறினார்.

Similar News