கஞ்சாவுடன் சிக்கிய கூட்டுறவு செயலாளர் - போலீசார் கைது செய்து நடவடிக்கை
கஞ்சா பதுக்கி வைத்திருந்த கூட்டுறவு செயலாளரை கைது செய்துள்ளது காவல்துறை.
கஞ்சா பதுக்கி வைத்திருந்த கூட்டுறவு செயலாளரை கைது செய்துள்ளது காவல்துறை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கூட்டுறவு சங்க செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் கருப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார்.
இவர் மீது ஏற்கனவே வழக்குகள் சோழ மன்னன் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கருப்பட்டி பகுதிகள் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செல்வகுமார் 800 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டு விசாரணை நடத்தினர்.
அவர் கஞ்சா பதுக்கி வைத்தது உறுதியாகி உள்ள காரணத்தால் அந்த இடத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.