கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவ தொடர்ச்சி - சோதனையில் கொத்து கொத்தாக சிக்கும் பயங்கரவாத தொடர்பு
சென்னையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேர் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 15 லட்ச ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த 10'ம் தேதி 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை செய்தது. இதன் மூலம் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம் கார்டு, பண பரிவர்த்தனை வழங்கி ஆதரவாக செயல்பட்டு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு பகுதிகளில் நாலு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.