கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் - சல்லடை போடும் என்.ஐ.ஏ, மேலும் சிக்கும் தகவல்கள்
கோயமுத்தூர் கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேரை என்.இ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோயமுத்தூர் கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேரை என்.இ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரின் வீடுகள் மற்றும் அவர்கள் எங்கு எங்கு சென்றார்கள் என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கைதான பெரோஸ்கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகியோர் நேற்று கோயம்புத்தூர் காவலர் பயிற்சி மையதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் அதனை தொடர்ந்து 5 பேரின் வீடுகள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களுக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றன.