“காங்கிரஸ் கட்சியின் தலைமை பூஜ்ஜியமாக உள்ளது” - எம்.பி பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் தாக்கு!!

“காங்கிரஸ் கட்சியின் தலைமை பூஜ்ஜியமாக உள்ளது” - எம்.பி பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் தாக்கு!!

Update: 2019-07-30 12:32 GMT


உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் சிங். இவர், காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார். இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியுள்ளார். அதோடு தான் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியையும் இன்று ராஜினாமா செய்தார். 


அமேதி, ரேபரேலி தொகுதிகளில் மிகவும் செல்வாக்காகத் திகழும் சஞ்சய் சிங்கின் விலகல், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.


சஞ்சய் சிங் கடந்த 1984-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவருக்கு அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பி்ல மாநிலங்களவை எம்பி. பதவி வழங்கப்பட்டது. இவரின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்றுக்கொண்டுள்ளார்.


தனது ராஜினாமா குறித்து சஞ்சய் சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


காங்கிரஸ் கட்சியில் தலைமை பூஜ்ஜியமாக இருக்கிறது. காங்கிரஸ் இன்னும் கடந்த காலத்தில்தான் இருக்கிறது. எதிர்காலத்தை நோக்கி நகரவில்லை. 


இன்று இந்த நாடு பிரதமர் மோடியுடன் இருக்கிறது. இந்த தேசம் மோடியுடன் இருப்பதால், நானும் அவருடன் இருப்பதே நல்லது. நான் எனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன்.




https://twitter.com/ANI/status/1156131096658157568?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1156131096658157568&ref_url=https://aajtak.intoday.in/story/congress-rajya-sabha-mp-sanjay-singh-resign-1-1106136.html



இவ்வாறு அவர் கூறினார்.


சஞ்சய் சிங்கின் மனைவி அமிர்தா சிங்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டார். இவர் உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு தலைவராக இருந்த நிலையில் ராஜினாமா செய்தார். 


Similar News