இப்போ தான் காது குளிருது! விவசாயிகள் மகிழ்ச்சி! செல்போன் மூலம் பருத்தியின் தரம் கண்டுபிடித்து அதிக விலை நிர்ணயம்!

இப்போ தான் காது குளிருது! விவசாயிகள் மகிழ்ச்சி! செல்போன் மூலம் பருத்தியின் தரம் கண்டுபிடித்து அதிக விலை நிர்ணயம்!

Update: 2020-07-02 07:37 GMT

செல்போன் மூலம் பருத்தியின் தரம் கண்டுபிடித்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைத்துள்ளது. அரசே நேரடி கொள்முதலில் ஈடுபடுவதால் இடைத்தரகர்கள் சிரமம் இன்றி வேலை முடிகிறது.  

கும்பகோணத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஒரே நாளில் 800 விவசாயிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தியை கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், இந்திய பருத்தி கழக அதிகாரிகள் செல்போன் மூலம் பருத்தியின் தரத்தை கண்டறிந்து விலை நிர்ணயம் செய்தனர். அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 500 ரூபாய் வரை கிடைத்த‌தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் அனுப்ப‌ப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். பருத்தி நனையாமல்இருக்க அங்கு கொட்டகை அமைக்கப்படுவதையும் விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.  

பருத்தி நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்..?

காலை நேரத்தில், நன்கு மலர்ந்த பருத்தியை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின் போது, காய்ந்த இலைச்சருகுகள், பருத்தியில் சேராமல் தடுக்க, செடியின் அடிப்பகுதியில், ஆரம்பித்து, மேல்நோக்கியவாறு, அறுவடை செய்யலாம். தரத்தை மேம்படுத்த, நன்கு மலர்ந்த, பருத்தியை தனியாகவும், மலராத கொட்டை பருத்தி, பூச்சி, நோய் தாக்கியது மற்றும் கறைபடிந்த பருத்தியை தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.

நன்றாக முதிர்ந்து, வெடித்த காய்களில், மட்டுமே பருத்தியை பறிக்க வேண்டும். சேகரிக்க துணிப்பையை பயன்படுத்துவதுடன், அறுவடை செய்யும் தொழிலாளர்கள், தலையை துணியால் கட்டிக்கொள்ள வேண்டும்.வெவ்வேறு ரகங்களை கலக்கக்கூடாது. பருத்தியின் மீது தண்ணீர் தெளிக்கக்கூடாது. இத்தகைய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால், பருத்தியின் தரம் பாதுகாக்கப்பட்டு, சந்தைகளில் நல்ல விலை கிடைக்கும் என, வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்


Similar News