மாநில மொழியில் நீதிமன்ற தீர்ப்புகள் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மோடி பாராட்டு

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

Update: 2023-01-23 02:30 GMT

பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பதிவில் "சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்கச் செய்ய பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மேலும் இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது பாராட்டுக்குரிய சிந்தனை. இது பலருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது" எனக் கூறிய மகாராஷ்டிரா மற்றும் மும்பை பார் கவுன்சில் சார்பில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.


மேலும் மற்றொரு டுவிட்டில் பிரதமர் மோடி "நமது கலாச்சாரத்தை பறைசாற்றும் பல மொழிகள் இந்தியாவில் உள்ளன. பொறியியல், மருத்துவம் போன்ற பாடங்களை தாய் மொழியில் படிப்பது உள்ளிட்ட இந்திய மொழிகளை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.





 


Similar News