வயிற்றெரிச்சலில் கம்யூனிஸ்ட்டுகள் - பூமி பூஜையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம்.!

வயிற்றெரிச்சலில் கம்யூனிஸ்ட்டுகள் - பூமி பூஜையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம்.!

Update: 2020-07-28 02:17 GMT

இந்துக்களின் பல நூற்றாண்டுக் கனவு நனவாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொறுக்கவில்லை. வரும் ஆகஸ்ட் 5 அன்று ராம் ஜென்ம பூமியில் புதிதாக ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க பூமி பூஜை நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பல தரப்பினரும் மக்கள் அனைவரும் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பூமி பூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இடதுசாரி ஆதரவாளர்கள் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் இந்த நிகழ்வு ஒளிபரப்பப்படக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுதியுள்ள கடிதத்தில், 'அயோத்தியில் நடக்க‌ இருக்கும் மத நிகழ்ச்சியை ஒளிபரப்புவது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும் அயோத்தி ராம ஜென்ம பூமி விஷயம் நீண்ட காலமாக சட்ட ரீதியான பிரச்சினையாக இருந்து வந்ததோடு இரு சமூகத்தினரிடையே மோதல் மற்றும் கருத்து வேறுபாடு ஏற்படக் காரணமாக இருப்பதாலும் பூமி பூஜை நிகழ்வை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது' என்று வாதிட்டுள்ளது.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அதை ஒட்டிய ராம ஜன்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் என்று தொடங்கிய இயக்கமும் பல ஆண்டுகளாக சமூகத்தில் மோதல் மற்றும் விரோதத்துக்கு காரணமாக இருந்து வருகிறது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தூர்தர்ஷனின்‌ செயல்பாடுகளைப் பற்றி வரையறுக்கப்பட்ட விதிகளைக் கொண்ட பிரச்சார்‌ பாரதி சட்டத்தின் பிரிவு 12 2(a)வைக் குறிப்பிட்டு 'நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதிப்புகளையும் காக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், 'மதச்சார்பின்மை மற்றும் மத ஒற்றுமையை' அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் அரசு தொலைக்காட்சி தற்போது நிலவும் தேச ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வண்ணம் அயோத்தியில் நடக்க இருப்பதை போன்ற ஒரு மத நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்றும் கூறியுள்ளது.

"வரலாற்று ரீதியாக அந்த நிலத்தில் நிலவும் பிரச்சினையைத் கருத்தில் கொண்டு இந்த மத நிகழ்ச்சியை அரசியலாக்குவதைத் தவிர்த்து மதச்சார்பற்ற நாடு என்ற பிம்பத்தை பாதிக்காத வண்ணம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, "அரசால் நிர்வகிக்கப்படும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் அயோத்தியில் நடக்கும் மத நிகழ்ச்சியை ஒளிபரப்புவதைத் தவிர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

நன்றி : Opindia

Similar News