பஞ்சாப் மாநிலத்தில் மே- 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு: விவசாய பணிகளுக்கு மட்டும் பகுதிநேர ஊரடங்கு..

பஞ்சாப் மாநிலத்தில் மே- 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு: விவசாய பணிகளுக்கு மட்டும் பகுதிநேர ஊரடங்கு..

Update: 2020-04-10 13:45 GMT

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761 ஆக இன்று அதிகரித்துள்ளது. அதேபோன்று கொரோனா பாதிப்புக்குஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. இன்றுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 516 பேர் குணமடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 133 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை தரப்படும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். ஆனால் வரும் 15 ந் தேதியில் இருந்து விவசாயிகளுக்கு மட்டும் விவசாய பணிகளுக்காக பகுதிநேர ஊடங்கு கடைபிடிக்க உள்ளதாக குறிப்பிட்டார். மற்றவர்கள் வீட்டில்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Source : https://news.abplive.com/news/india/coronavirus-in-india-latest-news-live-updates-covid-19-total-cases-lockdown-in-india-1180287

Similar News