பாஜக எம்பிக்கள் தொகுதியில் தினமும் பாத யாத்திரை செல்லவேண்டும்! யாத்திரையின்போது செய்ய வேண்டியது பற்றி பிரதமர் மோடி அறிவுரை !!

பாஜக எம்பிக்கள் தொகுதியில் தினமும் பாத யாத்திரை செல்லவேண்டும்! யாத்திரையின்போது செய்ய வேண்டியது பற்றி பிரதமர் மோடி அறிவுரை !!

Update: 2019-07-09 13:03 GMT

பா.ஜ.க எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் பாதயாத்திரை செல்ல வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.


பா.ஜ.கவின் பார்லிமென்டரி குழு கூட்டமானது பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது ; மஹாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு எம்.பி.க்களும் தங்களது தொகுதிகளில் 150 கி.மீ. பாத யாத்திரை செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் 15 கி.மீ. தூரம் நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும்.


கிராமங்கள் புத்துயிர் பெற்று தன்னிறைவு அடைவது, மரம் நடுதல், குறைந்த செலவில் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பாதயாத்திரையின் போது தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் செல்வதுடன் மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்தும் விளக்க வேண்டும். வரும் காலங்களில் நமது கொள்கைகள் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையினை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார் என்று அவர் கூறினார்.


Similar News