கர்னலாக களமிறங்கும் தோனி! துணை ராணுவப்படையில் இணைந்து சேவை!

கர்னலாக களமிறங்கும் தோனி! துணை ராணுவப்படையில் இணைந்து சேவை!

Update: 2019-07-21 06:05 GMT

இந்திய அணியின் நட்சத்திர வீரர் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் தோனி, அடுத்த இரண்டு மாதம்
புதிய அவதாரத்தில் களமிறங்குகிறார். ராணுவத்தின் மீதும் நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவராக இருக்கும் கேப்டன் தோனி இரு மாதம், துணை ராணுவப்படையில் இணைந்து சேவை செய்ய உள்ளார். இதை இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளார். கடந்த 2011ல், உலக கோப்பை வென்ற பிறகு, இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் கவுரவ ‘லெப்டினென்ட் கர்னல்’ ஆனார் தோனி. எல்லைப் பகுதிகளுக்கு சென்று வீரர்களை சந்தித்தார். 2015ல் பாராசூட்டில் இருந்து குதிப்பது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றார். தற்போது மீண்டும் ராணுவத்துக்கு செல்கிறார்.


இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, டுவென்டி–20’ (2007), ஒருநாள் (2011) என இரண்டு உலக கோப்பை பெற்று தந்தார்.2014 கடைசியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், வரவிருக்கும் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சேர்க்கப்படவில்லை., தோனி இங்கிலாந்து, உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.


பல்வேறு செய்திகள் வெளியான போதும் தோனி மவுனம் காத்தார். தொடருக்கான அணியில் இடம் பெறுவாரா என சந்தேகமாக இருந்தது. ஆனால் ‘தோனி தற்போதைக்கு ஓய்வு முடிவில் இல்லை’ என இவரது நண்பர் அருண் பாண்டே தெரிவித்தார்.


மாறாக அடுத்த இரு மாதம், துணை ராணுவப்படையில் இணைந்து சேவை செய்ய உள்ளார். இதை இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளார்.


Similar News