மக்களை பாதுகாப்பவர் தோனி! அவருக்கு பாதுக்காப்பு தேவை இல்லை! தோனிக்கு ‘சல்யூட்’.

மக்களை பாதுகாப்பவர் தோனி! அவருக்கு பாதுக்காப்பு தேவை இல்லை! தோனிக்கு ‘சல்யூட்’.

Update: 2019-07-28 04:56 GMT

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2011 முதல் துணை ராணுவ படையின் பாராசூட் பிரிவில் கவுரவ ‘லெப்டினென்ட்’ கர்னல் ஆக உள்ளார். மேற்கு இந்திய தொடரில் இருந்து விலகிய இவர், இரண்டு மாதம் ராணுவ பணியில் பணியாற்றுகிறார்


இது குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில்,‘‘தோனிக்கு ராணுவ பாதுகாப்பு தேவையில்லை, அவர் மக்களை பாதுகாப்பார். இந்திய குடிமக்கள் ராணுவ சீருடை அணிய வேண்டும் என விரும்பினால், அந்த உடைக்கான பணிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்தவகையில் தோனி அடிப்படை பயிற்சிகளை கற்றுத் தேர்ந்துள்ளார். தனது பணியை சிறப்பாக செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை,’’ என்றார்.


இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில்,‘‘தோனி எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரியது. இது இந்திய இளைஞர்களுக்கு துாண்டுகோலாக அமையும். அவர்களும் ராணுவத்துடன் இணைந்து சிறிது காலம் செயல்பட வேண்டும். இளைஞர்கள் இதுபோல புதியவற்றை கற்றுக் கொள்வது தேசத்துக்கு உதவியாக இருக்கும்,’’ என்றார்.


காம்பிர் ‘சல்யூட்


ராணுவத்தில் எந்தளவுக்கு தீவிரமாக உள்ளார், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார் என்பதை தோனியின் செயல் காட்டுகிறது. காஷ்மீருக்கு சென்று ராணுவ சேவை செய்வது, ரோந்துப் பணியில் களமிறங்க உள்ளது வரலாற்று சிறப்பு வாய்ந்தது.


இது, இந்திய இளைஞர்களுக்கு உற்சாகம் தரும். தாங்களும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற துாண்டுகோல் ஏற்படும். அவர்களுக்கு ‘ரோல் மாடலாக’ திகழ உள்ள தோனிக்கு ‘சல்யூட்’. இவ்வாறு காம்பிர் கூறினார்.


Similar News