காஷ்மீரில் அரங்கேறியதாக பரவும் போலி செய்தி! தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட பாகிஸ்தான் : வைரல் பதிவின் திடுக்கிடும் பின்னணி!

காஷ்மீரில் அரங்கேறியதாக பரவும் போலி செய்தி! தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட பாகிஸ்தான் : வைரல் பதிவின் திடுக்கிடும் பின்னணி!

Update: 2019-08-28 10:45 GMT

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறி பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வைரலான இதுதொடர்பான பதிவில், முகத்தை மூடியவாறு, போலீஸ் என பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த சிலர் கையில் தடியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது காஷ்மீரில் நடைபெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



போலி செய்தி


இந்த வீடியோ பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இது காஷ்மீரில் நடக்கவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் எடுக்கப்பட்டதாகும். சிந்த் மாகாண காவல்துறையினர் மீது அவதூறு பரப்ப சிலர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ சிந்த் மாகாண போலீசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மே 11ந் தேதி பதிவிடப்பட்டுள்ளது.




https://twitter.com/sindhpolicedmc/status/1127167061803896833


இதன்மூலம் இந்த வீடியோ காஷ்மீரில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும் என்று குறிப்பிடுகிறது மாலைமலர் செய்தி தொகுப்பு.


Similar News