நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய் சேருகிறது - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு எந்தவித கமிஷனும் இடைத்தரகரும் என்று பணம் நேரடியாக போய் சேருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் மானியங்கள் இப்போது நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் பலன்கள் உரியவர்களுக்கு நேரடியாக போய் சேருகிறது. இதுவரையில் மத்திய பா.ஜ.க அரசு ரூபாய் 25 லட்சம் கோடியை நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நேரடி பண பரிமாற்றத்தின் பயன் குறித்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காந்தி தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் என்.டி ராமராவ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசுகிறபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார் .அப்போது அவர் கூறியதாவது :-
மத்திய அரசின் மானியங்கள் இப்போது நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் கசிவுக்கு வழி இல்லாமல் போகிறது . பிரதமர் மோடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணக்கசிவு செயல் முறையை கட்டுப்படுத்தி உள்ளார். பணக்கசிவுக்கு வழி இல்லை பயனாளிகளுக்கு பணம் போய் சேருகிறது. தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக மாறி இருக்கிறது. இதனால் மனித முட்டாள்தனமும், சபலமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நாம் பின்பற்றி வருகிற தொழில்நுட்பம் பொது மக்களுக்கு போய் சேர வேண்டிய பலன்கள் நேரடியாக போய் சேருவதை உறுதி செய்கிறது. இதனால் நல்லாட்சியின் குறிக்கோள் நிறைவேறுகிறது புத்திசாலித்தனம் சில அம்சங்களை கொண்டிருக்கும். அதிலும் மக்கள் இடையே புகுந்து கொள்ள தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை எந்தவிதமான திருட்டுத்தனமும் செய்து விடாமல் யார் எதை பெற வேண்டுமோ அதை அவர்கள் பெற முடிவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நல்லாட்சி என்பது நோக்கங்களை செயல்படுத்தக்கூடிய கருவிகளை தேடுவதாகும். குறைவான பணியாளர்கள் நிறைவான நிர்வாகம் என்பது தான் அரசின் தாரக மந்திரம் ஆகும். எங்கு தேவைப்படுகிறதோ அங்கு அரசின் இருப்பு போதுமான அளவில் இருக்கிறது . மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவது நல்லாட்சியில் மிக முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.