பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி - சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததாகத் தகவல்.! #Djokovic #Tennis #Corona

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி - சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததாகத் தகவல்.! #Djokovic #Tennis #Corona

Update: 2020-06-24 02:20 GMT

டெய்லி மெயில் பத்திரிக்கை செய்திகளின் படி, உலக நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது அட்ரியா டென்னிஸ் டூரில் சமூக விலகலைப் புறக்கணித்து இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜோகோவிச்சின் அட்ரியா டூரில் விளையாடிய பிறகு விக்டர் ட்ரொக்கி எனும் வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கிரிகர் டிமிட்ரோவ் மற்றும் போர்னா கோரிக் ஆகிய வீரர்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்தனர். இதனால் சுற்றுப்பயணத்தை மறுதொடக்கம் செய்ததைப் பற்றி டென்னிஸ் நிர்வாகத்தின் நோக்கங்கள் குறித்து சந்தேகம் எழுந்தது.

முன்னாள் யூகோஸ்லாவியாவை உள்ளடக்கிய நாடுகளில் இந்த போட்டி நடந்தது. போட்டியின் முதல் நாள் பெல்கிரேடில் நிரம்பிய அரங்கங்களைக் கண்டது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுற்றுப்பயணம் மீண்டும் தொடங்கும் போது நிகழ்வுகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை செயல்படுத்துவோம் என்று ஆளும் குழு உறுதிகூறியது.

பிரிட்டனின் டான் எவன்ஸ் ஜோகோவிச்சைக் கண்டித்தார், டிமிட்ரோவ் மற்றும் கோரிக் ஆகியோருக்கு வைரஸ் தொற்று வந்த பின்பாவது "ஜோகோவிச் பொறுப்பை உணர வேண்டும்" என்று கூறினார்.

"இது ஒரு மோசமான உதாரணம் என்று நான் நினைக்கிறேன்," என்று எவன்ஸ் கூறினார்.

"இதை இப்படி சொல்லிப் பாருங்கள், விருந்து வைத்திருக்க வேண்டும், பின்னர் நடனமாட வேண்டும் என்று அவசியமில்லை. தனது நிகழ்வு எப்படி சென்றது என்பதற்கு ஜோகோவிச் தான் பொறுப்பு" என்று மேலும் அவர் கூறினார்.

Similar News