அ.தி.மு.க-வுடன் மோதினால் அவ்வளவு தான்.. பம்மி பதுங்கும் தி.மு.க : தென் மாவட்ட 10 தொகுதிகளில் 1-ல் மட்டுமே தி.மு.க போட்டியா?

அ.தி.மு.க-வுடன் மோதினால் அவ்வளவு தான்.. பம்மி பதுங்கும் தி.மு.க : தென் மாவட்ட 10 தொகுதிகளில் 1-ல் மட்டுமே தி.மு.க போட்டியா?

Update: 2019-03-12 09:02 GMT

தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடவும், மற்றவைகளை கூட்டணிக்கு ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது. அதிமுகவுடன் நேருக்கு நேராக மோதுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு என்று தெரிய வந்துள்ளது.


தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக் கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கன்னி யாகுமரியைத் தவிர மற்ற 9 தொகுதி களிலும் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வென் றது.


தேனியில் 3.14 லட்சம், சிவகங்கையில் 2.25 லட்சம், மதுரையில் 1.97 லட்சம் என அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் மற்ற தொகுதிகளில் 1.24 லட்சத்துக்கும் மேல் கூடுதல் வாக்குகளைப் பெற்று அதிமுக வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது.


இந்த மாவட்டங்களில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுக தென் மாவட்ட தொகுதிகளையே அதிகம் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


அதிமுக கூட்டணியில், கன்னியாகுமரி, தூத்துக்குடியை பாஜகவுக்கும், விருதுநகரை தேமுதிகவுக்கும், திண்டுக்கல்லை பாமகவுக்கும் ஒதுக்கிவிட்டு மற்ற 6 தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை 4 இடங்களிலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை தலா 1- இடங்களிலும் எதிர்த்துப் போட்டியிடும் சூழல் உள்ளது. இதில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக வியூகம் வகுத்து வருவது திமுகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.



Similar News