வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா புகார்.. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு.!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா புகார்.. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு.!

Update: 2019-03-30 02:34 GMT

வேலூர் பாராளுமன்ற, தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், போட்டியிடுகிறார். அங்கு, வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது.


இந்நிலையில், காட்பாடி காந்தி நகரிலுள்ள துரைமுருகன் வீடு, அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில், நேற்று நள்ளிரவு சோதனை நடத்த, அதிகாரிகள் வந்தனர்.
முதலில் சோதனை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக தகவல் வெளி யானது.


இதற்கு துரைமுருகன் மற்றும் அவரது வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் தேர்தல் செலவின பார்வையாளர் குழு என தெரிவித்ததாக கூறப்படுகிறது.





இதனால் துரைமுருகனின் வீட்டில், சோதனை நடத்த வந்தவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளா? அல்லது தேர்தல் செலவின பார்வையாளர் குழுவா? என தெரியாத நிலையில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதற்கிடையே, துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் வந்த பிறகு சோதனை நடத்தப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு, ஏராளமான திமுகவினர் கூடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


திமுக தொண்டர்களின் எதிர்ப்பால் அதிகாலை 3 மணிக்கு சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.


Similar News