தி.மு.க மறக்கலாம், மறைக்கலாம்! மக்கள் நினைவில் வைத்திருக்கும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை #DMK #JULY23 #ManjolaiMurder

தி.மு.க மறக்கலாம், மறைக்கலாம்! மக்கள் நினைவில் வைத்திருக்கும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை #DMK #JULY23 #ManjolaiMurder

Update: 2020-07-23 07:16 GMT

ஜூலை 23'ம் தேதி என்பது தமிழக வரலாற்றில் மறக்க இயலாத நாள். விளிம்பு நிலை மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை கேட்டு அதனை முதலாளித்துவ வர்க்கம் நிராகரித்து அதனால் போராடிய சாமானியர்களை பண முதலைகள் ஆளும் கட்சியை ஏவி அடித்து விரட்டி 17 பேரின் உயிரை குடித்த கருப்பு நாள்.

மாஞ்சோலையிலுள்ள தேயிலை தோட்ட கூலி தொழிலாளிகள் தங்களது அடிப்படை உரிமகளுக்காக தங்கள் முதலாளிகளிடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவ்வளவு ஒன்றும் பெரிதான கோரிக்கைகளோ அல்லது லாபத்தில் பங்கு கேட்டு பங்குதாரர்களாகவோ அந்த கூலி தொழிலாளர்கள் போராடவில்லை. மாறாக இன்று சாதாரண ஊழியர்களின் அடிப்படை உரிமைகளாக ஏற்கப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டிருக்கும் உரிமைகளைதான் அன்று அவர்கள் கோரிக்கைகளாக வைத்தார்கள்.

1) அடிபட்டத்திலுள்ள 70 ரூபாய் கூலியை 30 ரூபாய் உயர்த்தி 100 ரூபாயாக கேட்டனர்.

2) பணியில் இருக்கும் பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் விடுப்பு.

3) 8 மணி நேர வேலை.

4) இதற்க்கு முன் இதை கேள்வி கேட்ட 652 கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் விடுதலை கோரி.

மேற்கூறிய இந்த நான்கு காரணங்களுக்காக தொழிலாளிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு குடுக்க பேரணியாக வந்தார்கள்.

இதனுடன் சேர்ந்து வந்த அரசியல் தலைவர்களான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சி தலைவர்களை போலீசார் உள்ளே விட மறுத்தனர் இதனால் சிறுது நேரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு கலவரமாக மாறியது. காவல்துறை தடியடி நடத்தவே மேலும் கலவரமானது.இதில் தப்பிக்க ஒரு புறம் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாக சுவர் இருந்ததால் மறுபக்கம் இருந்த தாமிரபரணி ஆற்றில் குதித்தவர்களில் 17 பேர் பலியாயினர் ஒன்னரை வயது குழந்தை உட்பட.

இந்த கொடூர சம்பவம் நிகழ்த்தபட்ட போது ஆளும்கட்சி தி.மு.க!

இன்று சமூக நீதி, தாழ்த்தபட்டவர் உரிமை, ஒடுக்கப்பட்டவர் நலன் என தினமும் அறிக்கைகளை கலர் கலராக விடும் தி.மு.க'வேதான் அன்றைய ஆட்சிக்கட்டிலில் இருந்தது. அன்றைய முதல்வரும் இன்றைய தி.மு.க தலைவரின் தகப்பனாருமாகிய மு.கருணாநிநி நினைத்திருந்தால் இதனை நடக்கவிடாமல் செய்திருக்கலாம்.ஆனால் ஏனோ மனம் வராமல் இருந்துவிட்டார்கள். இன்று வரலாற்றில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை பற்றி துளியிம் நினைப்பில்லாமல் நாங்கள் வந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்வோம் என ரூ.380 கோடி குடித்து கூலிக்கு ஆள் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

Similar News