இணையத்தை தெறிக்க விடும் #திருட்டு_திமுக ட்ரெண்டிங் - ஆதங்கப்படும் உடன்பிறப்புகள்.! @Dmk #MKStalin #Udhayanithi

இணையத்தை தெறிக்க விடும் #திருட்டு_திமுக ட்ரெண்டிங் - ஆதங்கப்படும் உடன்பிறப்புகள்.! @Dmk #MKStalin #Udhayanithi

Update: 2020-07-26 04:24 GMT

இணையம் என்பது விசித்திரமானது. சாதாரண நிகழ்வையும் கூட சர்வேத அளவில் எடுத்துச்செல்லும் சக்தி வாய்ந்தது, அதனால்தான் 50 ஆண்டுகள் கூட அரசியலில் கோலோச்சிய கட்சிகள் கூட இன்று ஐடி விங்க் எனப்படும் சமூக வலைதள பிரிவை நியமித்து பெரும்பாலும் கட்சியின் தலைமைகள் நேரடி கட்டுப்பாட்டிலே வைத்துள்ளனர். முனபெல்லாம் அரசியலில் தம் கட்சியின் கருத்துக்கள், கொள்கைகள், சின்னம் போன்ற முக்கிய விஷயங்களை மேடை போட்டு வாரக்கணக்கில் ஏன் மாதக்கணக்கில் கூட மக்களிடம் கொண்டு சேர்க்க படாத பாடுபட்டனர். ஆனால் தற்பொழுது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை விட, மேடை பேச்சுகளை விட சமூக வலைதள கணக்குகளில் விடும் அறிக்கையே பவர்ஃபுல்லாக கருதப்படுகிறது! அந்த வகையில் இணையத்தின் எழுச்சி சக்தி வாய்ததாக மாறிவிட்டது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சமூக வலைதளங்களில் அரசியலில் வளர்ந்தவர்களும் அதிகம், வீழ்ந்தவர்கள் அதைவிட மிக அதிகம். ஏத ஒரு வகையில் தமிழக அரசியலில் தற்பொழுது இணையமே முக்கிய பங்காக மாறியுள்ளது.

அந்த வகையில் ஒரு கட்சியை நினைவு கூற போராட்டங்களும், அமல்படுத்திய நல்ல திட்டங்களும், மக்களுக்கு செய்த நன்மைகளும், தலைவர்களின் கருத்துக்களும், கட்சியின் வரலாறும் நினைவு கூறப்படும். ஆனால் தி.மு.க'வுக்கு சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும். தி.மு.க என்றாலே ஒன்று ஊழல் இல்லையேல் திருட்டு தான் ஞாபகமே மக்களுக்கு வரும் அளவிற்க்கு காட்சிகள் மாறிவிட்டன. அது போன்று நேற்று இரவு முதல் #திருட்டு_திமுக என்கிற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரண்டிங்கில் 25000 பதிவுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து வெளியாட்களை கேட்பதை விட தி.மு.க'வின் உடன்பிறப்பு ஒருவரிடமே கேட்டு விடுவோமே என்று கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு காலையிலேயே ஃபோன் செய்தால். கந்த சஷ்டி பாடல் ரிங்டோனாக ஒலித்தது இது என்னடா முருகனுக்கு வந்த சோதனை என்று நினைக்கும் போதே லைக்கு வந்தார் மேற்படி உடன்பிறப்பு. கேள்வியை முன் வைத்த பொழுது, "தம்பி கட்சிய பத்தி கண்டவன் கண்டத பேசுவான் என்ன செய்றது? என்று கோபமுடன் ஆரமித்தார். அவரை கூல் செய்து 'அண்ணே காரணம் இல்லாமல் ஏன்'ணே அதுவும் தி.மு.க மட்டும் இது போல் திருட்டு பட்டத்தில் ட்ரெண்டிங் ஆகுது என கேட்டபொழுது.என்ன பன்றது தம்பி எங்க ஆளுங்க எதையாவது பண்ணாதான் முதல்ல நியூஸ்'ல போட்டு மானத்தை வாங்கிடுறாங்களே என்றார்.

"அண்ணே பன்றது தப்பா நியூஸ்'ல போடுறது தப்பா?" என்று கேட்ட பொழுது "அட ஏன் தம்பி நாங்க இங்க ஏதாவது மக்களுக்கு நிவாரணம், உதவி செஞ்சு நல்ல பேர் வாங்க முயற்சி பண்ணுவோம்"ஆனா எவனாவது எங்கேயாவது கை வச்சு எங்க மானத்த வாங்கிடுறான்"என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கடைசியாக "இது தொடர்பாக கட்சி மேலிடம்கிட்ட பேசுனீங்களா அண்ணே" என்று கேட்டபொழுது. அட போங்க தம்பி கட்சி'ல இப்பல்லாம் மேலிடம் பி.கே'தான் அவர்ட்ட எல்லாரும் பேச முடியாது என நொந்து போனார்.

மற்றொரு புறம் #திருட்டு_திமுக ட்ரெண்டிங் உச்சத்திலேயே உள்ளது.

Similar News