கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் தலைமறைவு - என்ன நடக்கிறது?

சென்னையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-17 03:32 GMT

சென்னையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வியாசர்படியை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா வலது கால் ஜவ்வு விலகியதால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் ஜவ்வு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார்.

அவர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் ஷங்கர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவி மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்குரிய பணி இடைநீக்க உத்தரவுகளை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்ற போது மருத்துவர்கள் இல்லை விசாரித்த போது அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது மருத்துவர்கள் தலைமுறையாக இருந்தால் போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். மருத்துவ அறிக்கையை வைத்து மருத்துவர்கள் தற்காலிக பணியை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


Source - Dinamalar

Similar News