ஒரே நேரத்தில் இரு காரியங்களில் ஈடுபடாதீர்கள்-ஜென் கதை விளக்கம்

ஒரே நேரத்தில் இரு காரியங்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றைக் கூட முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள் என்பதை விளக்கக் கூடிய கதை

Update: 2023-02-11 11:00 GMT

ஒரு இளைஞன் அந்த பகுதியில் தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு ஜென் குருவிடம் சென்றான். "குருவே நீங்கள் கற்றுக் கொடுக்கும் தற்காப்பு கலையை கற்க விரும்புகிறேன் .


தற்காப்பு கலையில் பல்வேறு பிரிவுகள் இருப்பதால் நீங்கள் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றைதான் கற்றுக் கொடுப்பீர்கள் . நீங்கள் கற்றுக் கொடுக்கும் பிரிவிலிருந்து வேறு ஒரு பிரிவு கலையை மற்றொரு குருவிடம் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என்று கூறினான். குரு அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார்.


அதை பார்த்து அந்த இளைஞன் குருவே நான் ஒரே நேரத்தில் இரண்டு கலைகளை கற்றுக்கொள்வதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா உங்கள் ஆலோனையை கேட்பதற்காக தான் நான் வந்தேன் என்றான். உடனே குரு "நீ ஆர்வ மிகுதியில் ஒரே நேரத்தில் கலைகளை கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறாய்.


ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூட பிடிக்க முடியாது. அதனால் நீ வேறு யாரிடமாவது வித்தை கற்றுக்கொள்" என்று கூறிச் சென்று விட்டார்.



Similar News