இங்கே 8 வழிச்சாலை வேண்டாம்! அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும்! - தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்!!

இங்கே 8 வழிச்சாலை வேண்டாம்! அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும்! - தி.மு.க.வின் மோசடியான இரட்டை வேடம் அம்பலம்!!

Update: 2019-07-19 11:22 GMT


சென்னை - சேலம் 8 வழிச்சாலை எனப்படும் பசுமை விரைவுச் சாலை திட்டம் (Chennai-Salem Green Corridor Express Highway) சேலம் நகரையும், சென்னை மாநகரையும் பிரமாண்ட திட்டமாகும். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த சாலையினால் சென்னை - சேலம் இடையே 340 கிலோமீட்டர் தூரமாக உள்ள தொலைவு 274 கி.மீ. தொலைவாக குறையும். அதேநேரம், பயண நேரமானது 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறையும்.


இந்த பசுமைவழிச் சாலையில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 9 மேம்பாலங்கள், வாகனங்களுக்காக 22 கீழ்வழிப் பாதைகள், பாலங்களுடனான 2 கீழ்வழிப் பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப் பாதைகள், 8 சுங்கச்சாவடிகள், பேருந்து மற்றும் லாரிகளுக்கான 10 நிறுத்தங்கள் ஆகியன அமைக்கப்பட உள்ளன.


இந்த 8 வழி சாலைத் திட்டத்துக்கு தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்த்தது. அதோடு மதக்களையும் தூண்டிவிட்டது. 


இதனையடுத்து சாலை திட்டத்தில் பல மாற்றங்களை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, நில எடுப்பின் அளவைக் குறைக்க சாலையின் அகலமானது 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைக்கப்பட்டது. வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தொலைவு மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது. வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலமானது 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கராக குறைந்துள்ளது. 


எட்டு வழிச்சாலையோடு இணைப்புச் சாலையாக (சர்வீஸ்) அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மூன்று சாலைகள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. இந்தச் சாலை சில இடங்களில் ஆறு வழிச்சாலையாகவும் குறைக்கப்பட்டது. சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்படுகிறது. திட்டத்தின் மதிப்பீடும், ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.7,210 கோடியாக குறைக்கப்பட்டது.


அப்படி இருந்தும் நேர்மையான எந்த காரணமும் இன்றி இந்த 8 வழிச் சாலை தேவையே இல்லை என்று வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்தது தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போதும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படும்” என்று வாக்குறுதி அளித்தது.


இவை அனைத்தையும் செய்து, தமிழ் நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் மாபெரும் துரோகத்தை செய்த தி.மு.க, இப்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்கிறது பாராளுமன்றத்தில். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன்தான் இந்த கோரிக்கையை முன் வைத்து பேசினார். 


அவர் பேசும்போது, “சென்னை - சேலம் 8 வழிச்சாலையான பசுமைச் சாலை திட்டத்தை நிறை வேற்றினால், பயண நேரம் 2 மணி நேரமாக குறையும்” என்றார்.


அப்போது, அவையில் இருந்த மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, “சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நீங்கள்தானே எதிர்க்கிறீர்கள்” என்று கேட்டார். 




https://www.youtube.com/watch?v=mN2qjMwYvRY


இதற்கு தயாநிதி மாறன் பதில் சொல்லாமல், மழுப்பலாக சப்பைகட்டு கட்டினார். 
இது தொடர்பான வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதோடு தி.மு.க.வின் மோசடியான பித்தலாட்ட நாடகத்தையும் மக்கள் காறிதுப்பி வருகின்றனனர்


Similar News