சோனியா மருமகனின் ₹4.62 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்

சோனியா மருமகனின் ₹4.62 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்

Update: 2019-02-18 17:33 GMT

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவத்தின் ₹4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 


கடந்த 2015-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் பகுதியில்,  66.55 ஹெக்டேர் அளவிலான நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர், அதே நிலம் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நில விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகித்து அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வத்ரா தனது தாய் மவ்ரீனுடன் சமீபத்தில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவத்துக்கு சொந்தமான ₹4.62 கோடி மதிப்புள்ள சொத்துகள் பொருளாதார முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



Similar News