கோவை அருகே கோலாகலமாக தொடங்கியது கோவில் யானைகள் புத்துணர்வு முகாம்

கோவை அருகே கோலாகலமாக தொடங்கியது கோவில் யானைகள் புத்துணர்வு முகாம்

Update: 2018-12-15 08:04 GMT

தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளின் உடல், மன நலத்தை மேம்படுத்துவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா வனத்துறை மூலம் யானைகள் புத்துணர்வு முகாம் திட்டத்தை தொடங்கினார்.  ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் இந்த யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முகாம் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் 27யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும்,பல யானைகள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சென்ற ஆண்டு 33 யானைகள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பாக்காடு பகுதியில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயத்தில் தொடர்ந்து 4 முறை யானைகள் முகாம் நடத்தப்பட்டது. இதையடுத்து, தேக்கம்பட்டியில் 6 முறை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாம் வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. கிட்டத்தட்ட 48 நாட்கள் நடக்கும் இந்த முகாம் மூலம் யானையின் மன அழுத்தம் குறைக்கப்பட்டு, ஆரோக்கியமாக இருக்க உதவுவதாக யானைப் பாகன்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவர்களின் உதவியுடன் மருந்துகள் கொடுக்கப்பட்ட யானைகள் உடல் எடை குறைக்கப்பட்டு, ஆரோக்கியம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாகன்கள் தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேக்கம்பட்டியில் இன்று தொடங்கும் யானைகள் புத்துணர்வு முகாமை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பலர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Samayam

Similar News