மும்மொழி கல்வி திட்டத்தில் சிக்சர் அடித்த எடப்பாடி - வழக்கம்போல் கடுப்பில் ஸ்டாலின்.! #EPS #MKStalin #ADMK #DMK

மும்மொழி கல்வி திட்டத்தில் சிக்சர் அடித்த எடப்பாடி - வழக்கம்போல் கடுப்பில் ஸ்டாலின்.! #EPS #MKStalin #ADMK #DMK

Update: 2020-08-03 09:15 GMT

மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்வி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக பல கட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1965 ஆம் ஆண்டு இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது, அதனை எதிர்த்து தமிழகத்தில் மாணவர்களும் மக்களும் வீதியில் இறங்கி தீவிரமான போராட்டத்தை நடத்தினர். பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இருமொழிக் கொள்கையை கட்டிக் காத்து வந்தனர். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்க கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழியில் நடக்கும் இந்த அரசு, இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இருமொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து, அம்மாவின் அரசு மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது" என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடியின் இந்த அறிக்கையால் வழக்கம்போல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அப்செட் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியில் இது தொடர்பாக அவர் பாராட்டி அறிக்கை விட்டாலும் ஊள்ளூர இனி இந்த மும்மொழி கொள்கை விஷயத்தில் அரசியல் செய்ய முடியாது மற்றும் இந்த விஷயத்தில் எடப்பாடி அரசு நல்லபெயர் வாங்கியது ஸ்டாலின் சற்றும் எதிர்பாராதது.மத்திய அரசு இந்த மும்மொழி கொள்கை விஷயத்தில் மாநில அரசுகளின் கருத்தை ஏற்கிறோம் என்ற அறிவிப்பை சமயோசிதமாக எடப்பாடி உபயோப்படுத்திக்கொண்டது எதிர்கட்சியான ஸ்டாலினால் ஜீரணிக்கமுடியவில்லை எனவும் உடன்பிறப்புகளால் பேசப்படுகிறது.

Similar News