F-16 ரக பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானப் படை.!

F-16 ரக பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானப் படை.!

Update: 2020-06-11 11:46 GMT

ppஎல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி கராச்சி வான் பகுதியில் இந்திய போர் விமானங்கள் பறப்பதாக வதந்தி பரவியதையடுத்து பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மக்கள் அச்சத்தில் உறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கராச்சி வாழ் மக்கள் வான் பகுதியில் போர் விமானங்களின் சத்தத்தை கேட்டதாகச் சொல்லும் அதே நேரத்தில் கராச்சி நகரத்தில் மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனால் வதந்திகள் இன்னும் வேகமாக பரவின. கராச்சியில் வசிக்கும் சிலர் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர். மேலும் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கும் நெருக்கமாக பறந்ததாக வதந்திகள் பரவின.

இதனைத் தொடர்ந்து பதட்டத்தில் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய விமானப்படை செயல்பாட்டுக்கு பதிலடி கொடுக்க மஸ்ரூர் விமானப்படைத் தளத்திலிருந்து அதன் போர் விமானங்களை அனுப்பியதாக தெரிகிறது. எனினும் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டிச் சென்றன என்ற செய்தியை மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் இந்திய போர் விமானம் என்று நினைத்து பாக்கிஸ்தானிய விமானப்படை, அதன் சொந்த F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் மஸ்ரூர் விமானப்படைத் தளத்திலிருந்து ரோந்துக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தானிய போர் விமானங்களில் F-16 ரக போர் விமானம் ஒன்று படைத் தளத்திற்கு திரும்பவில்லை என்று பதிவிட்டனர்.

விமானவியல் வல்லுநர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த F-16 ரக போர் விமானத்தை இந்திய ஜெட் என தவறாக நினைத்து பாகிஸ்தானிய விமானப்படை சுட்டு வீழ்த்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவர் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை பயன்படுத்தி போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று ஒரு புகைப்படத்தை யூகித்துள்ளார்.

மற்றொருவர் பாகிஸ்தான் அதன் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஊகிக்கப்படுவதாகவும் அரபிக் கடல் பகுதியில் நொறுங்கி விழுந்த விமானத்தைத் கண்டறிய பாகிஸ்தான் விமானப் படையும் சீனாவும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

எனினும் பாகிஸ்தானிய விமானப்படையும் அதன் ஊடக பிரிவான ISPRம் அவர்களது போர் விமானத்தை அவர்களே சுட்டு வீழ்த்திய விவகாரீத்தைப் பற்றி எவ்விதமான அறிக்கையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றன. இந்த நிகழ்வைப் பற்றி அதிகாரப்பூர்வமான உறுதிசெய்யும் தகவலும் இல்லை; மறுக்கும் தகவலும் இல்லை.

இந்நிகழ்வால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுவதற்கு முன்னர் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி கராச்சி வான் பகுதியில் பறப்பதாக பதட்டம் ஏற்பட்டது கராச்சி நகரில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்திய விமானப்படை தாக்குதலை எண்ணி அச்சம் கொண்டதாக பல பாகிஸ்தானிய சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். கராச்சி மக்களைப் பொருத்தவரை கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் பறப்பதாக வதந்திகள் வெளியானபின் நகர் முழுவதும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டதாக கூறி உள்ளனர்.

பாகிஸ்தானிய விமானப்படை ஜெட்கள் வான்வெளியில் பறந்த சப்தத்தை கேட்டபோது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று இரவை, பாலாகோட் விமானத் தாக்குதல் நடந்த இரவு, போல் அச்சமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். எனினும் இந்திய விமானப்படை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை மறுத்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் விமானங்களை இந்திய விமானப்படை போர் விமானங்கள் என்று பாகிஸ்தான் ராணுவம் தவறாக நினைத்து விட்டதாக கூறப்படுகிறது.


நன்றி : Opindia

Similar News