விமான பயணங்களில் முக கவசம் இனி கட்டாயம் இல்லை - விமான போக்குவரத்து அமைச்சகம்

விமான பயணங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

Update: 2022-11-17 13:15 GMT

இந்தியாவில் விமான பயணங்களின் போது பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் அந்த கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி விமான பயணங்களில் பயணிகள் முதுகவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதை ஒட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.


கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்தில் முக கவசம் அணிவது நல்ல தினமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





 


Similar News