உலகின் மற்ற எந்த நதிகளுக்கும் இல்லாத அதிசயத்தை பெற்ற கங்கை!

உலகின் மற்ற எந்த நதிகளுக்கும் இல்லாத அதிசயத்தை பெற்ற கங்கை!

Update: 2020-08-07 03:51 GMT

இந்தியாவின் புனித நதி கங்கை நதி. கடைசி மூன்று வேதங்களான யஜூர், சாம மற்றும் அதர்வன வேதம் கங்கைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை தருகிறது. மதம் சார்ந்த குறியீடாக மட்டுமின்றி கங்கை நதி என்பது கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

கங்கை நதி பாய்ந்தோடும் வழியெங்கும் பல இலட்சம் விளை நிலங்கள் பயன் பெறுகின்றனர். இவையனைத்தையும் தாண்டி இந்த நதி குறித்து பல மரபுக்கதைகள் சொல்லப்படுகின்றன.

ரிக் வேதத்தில் இரு முறை கங்கையின் பெயர் வருவதாகவும், அதன் பின்னரே கங்கையின் மகத்துவம் மெல்ல மெல்ல உலகிற்கு பரவி தொடங்கியிருப்பதாகவும் வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர். விஷ்ணு புராணத்தின் படி கங்கை ஆனவள், திருமால் விஷ்ணுவின் திருவடியிலிருந்து வியர்வை என ஒரு மரபுக்கதை உண்டு. அதனாலேயே கங்கைக்கு "விஷுமபதி " என்றோர் பெயர் வழங்கப்படுகிறது. மற்ற சில புராணங்களில் கங்கை நதி பர்வத ராஜனின் மகள் என்றும், பார்வதி தேவிக்கு சகோதரி என்றும் கூறப்படுகிறது.

கங்கையின் மற்றொரு புனிதம் என்பது அதன் தூய்மைத்தன்மை. அந்த தூய்மைத்தன்மைக்கு கங்கை மகத்துவம் பொருந்திய நதி என்கிற மத ரீதியான அடையாளத்தை தாண்டி. அறிவியல் ரீதியாகவும் அதனை நிருபித்து வருகின்றனர் ஆய்வாளர்கள். இந்தியாவின் புகழ் பெற்ற சூழலியளாளர் கூறும் பொழுது, மற்ற எந்த நதிகளை விடவும் கங்கையில் ஆக்ஸிஜனை தக்க வைக்கும் தன்மை அதிகமாக உள்ளது. சுயமாக தன்னை தூய்மை செய்து கொள்ளும் இந்த தன்மையால் கங்கையின் ஆக்ஸிஜன் அளவு உலகின் மற்ற எந்த நதியை விடவும் 25 முறை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்.

இந்த பரிசுத்த தன்மையே கங்கையை அனைத்திலிருந்தும் மேம்பட்டதாக விளங்கச்செய்கிறது. இதன் காரணமாகவே கங்கையின் கரையில் உயிர் நீப்பதும், வேறெங்கேனும் உயிர் நீத்தால் அவர்களின் அஸ்தியை கங்கை நதியில் கரைப்பதையும் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.

எனவே கங்கை நதி தூய்மையின் அன்னையாகவே போற்றப்படுகிறாள். ஒரு மனிதரின் அறியாமை, மாயை, மரணம், ஆசை, கர்மா பாவம் என அனைத்தையும் தான் சுமந்து தன்னில் மூழ்கி எழுபவர்களுக்கு அவர்களின் தீமையை பெற்று கொண்டு நன்மையை மட்டுமே வணங்கும் கருணைத்தாய் கங்கை என்றால் மிகையில்லை.  

Similar News