ஒலிம்பிக்ஸ் குறித்து நாம் அறிந்திடாத அரிய தகவல்கள்.!

ஒலிம்பிக்ஸ் குறித்து நாம் அறிந்திடாத அரிய தகவல்கள்.!

Update: 2020-06-30 01:19 GMT

ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தையின் முழு பயோடேட்டா உங்களுக்காக...

துவங்கியதாக ஆண்டு

கிமு776 ஒலிம்பியா, கிரிஸில் துவங்கப்பட்டதாக இணையதளங்களில் காண கிடைகின்றன.

பங்கேற்பாளர்கள்

துவக்க காலங்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. 1900 முதலே பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நவீன கால ஒலிம்பிக்ஸை உருவாக்கியவர்

பிரஞ்சு மனிதர் பியர் ப்ரெட்டி, தி பாரோன் பியரி கோபர்டின் இவர் 1863 இல் பிறந்தவர். இளம் வயதில் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். வளரும் காலகட்டத்தில் உலக அமைதிக்கான சிறந்த வழி விளையாட்டு தான் என்பதை உணர்ந்தார். துவக்க கால ஒலிம்பிக்ஸ் பற்றிய தகவல்களால் தாக்கம்பெற்று அதை மீண்டும் புதுப்பிக்க முனைந்தார். தன் சொந்த செலவில் உலக நாடுகள் அனைத்திற்க்கும் வலம் வந்து அதன் பெருமையை எடுத்து கூறினார். அனைத்து நாடுகளின் சார்பாக ஒரு பிரதிநிதையை பாரிஸில் 1894 ஆம் ஒன்றினைத்தார் அன்று துவங்கியது நவீன ஒலிம்பிக்ஸின் புதியபிரவாகம்

இதை யார் கண்காணிக்கிறார்கள்

இந்த இயக்கத்தை பாரன் டி கோர்பட்டைன் துவங்கியபோது இவ்வியக்கத்தை கண்காணிக்க அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை அமைத்தார். இதன் தலைவராக அவரே 29 ஆண்டுகள் பதவியும் வகித்தார். 14 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்ட கமிட்டியில் இப்போது 130 உறுப்பினர்கள் வரை இதில் உள்ளனர்

ஒலிம்பியாட் என்பது என்ன?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இந்த நான்காண்டுகால இடைவெளியை ஒலிம்பியாட் என்கிறார்கள்

எங்கு நடைபெறும்....?

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும் நகரத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். நாட்டினை அல்ல. எனவே உலகிங்கிலுமிருந்து தம் நகரங்களில் நடத்த வேண்டும் என்பதற்கான கோரிக்கைகள் குவிகின்றன. அதை கமிட்டி தீர்மானிக்கும். ஓர் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடகின்றன என்றால் அதற்கு பல ஆண்டு தயாரிப்பு பணிகளும், அசுர உழைப்பும், அதீத பொருட்செலவும் தேவைப்படும்

ஒலிம்பிக் ஜோதி

இது ஒலிம்பிய கிரிஸ் நாட்டில் ஏற்றப்பட்டு எங்கு போட்டிகள் நடைபெறுகின்றனவோ அங்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து போட்டியாளர்களால் ஏந்தப்பட்டு போட்டியின் முடிவு வரை அனையாமல் காக்கப்படும்

ஒலிம்பிக்கின் இலட்சினை

இணைந்த ஐந்து வளையங்கள். ஐந்து கண்டங்கள் ஒன்றினைந்து பங்கேற்கிறது என்பதை குறிக்கவே இதை பியரி டி கோபர்ட்டின் வடிவமைத்தாராம். இதில் அமெரிக்க தனி கண்டமாக கணக்கில் கொண்டு அண்டார்டிக்கா விலக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கின் தாரக மந்திரம்

சிட்டியஸ் ஆல்ட்டியஸ் பார்ட்டியஸ் என்ற ஆங்கில சொற்களே அவர்களின் தாரக மந்திரம். இதன் தமிழாக்கம் "துரிதமானது, உயர்வானது, வலிமையானது" என்பதே. 

Similar News