இந்த கோவிலை சுற்றியுள்ள எந்த வீடுகளுக்கும் கதவுகள் இல்லை.. கடவுளே ஊரை காக்கும் அதிசயம்..

சனி சிங்னாப்பூர் எனும் சனீஸ்வரர் ஆலயம், ஷீரடியிலிருந்து 70 கி.மீ தூரத்தில் நாசிக்கில் அமைந்துள்ளது

Update: 2020-04-06 02:55 GMT

ஆச்சர்யம் நிறைந்த சனி சிக்னாபூர். அதிசய சனி பகவான் கோயில் . மஹாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியிலிருத்து 70 கி மி தூரத்தில் நாசிக் எனும் ஊரில் உள்ளது சனி சிக்னாபூர். இங்கு உள்ள வெட்ட வெளியான கோயிலில் சனீஸ்வரன் தெய்வமாக அருள் பாலிக்கிறார் . இங்குள்ள மக்கள் இவரை சனீஸ்வர மஹராஜ் என்று அழைக்கின்றனர். 300 வருடங்களுக்கு முன்பு இந்த ஊரின் அருகில் உள்ள பானஸ்நாலா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது அப்போது நீளமான ஒரு கல் கரை ஓரம் மிதத்து வந்தது அங்கு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இரும்பு வளையம் மாட்ட பட்ட தடியால் இந்த கல்லை அடித்த போது அதில் காயம் பட்டு ரத்தம் பெருக்தெடுத்தது .

உடனே ஊரில் ஒருவருக்கு சனி பகவான் கனவில் வந்து தானே இந்த கல் வடிவத்தில் வந்திருப்பதாக கூறி தன்னை வழிபட சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து இவரே இந்த ஊரை பாதுகாத்து வருவதாக நம்பு கிறார்கள் . அதற்கு சாட்சியாக இந்த ஊரில் எந்த வீட்டிற்க்கும் கதவுகள் கிடையாது . வங்கி கட்டிடங்கள் உட்பட எதற்கும் கதவுகள் இல்லை!

இங்கே யார் திருடினாலும் அவர் கண் போய்விடுமாம் அதற்கான வரலாற்றையும் சொல்கிறார்கள் . இந்த மூலவர் கல் மேலே எந்த வித மறைப் போ தடுப்போ பாதுகாப்போ இல்லாமல் மழை வெய்யில் என எல்லாவற்றையும் தன் மேனியில் தாங்கி வருகிறார். சனிக்சிழமைகளில் வரும் அமாவாசை நாட்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணை கருப்புளுந்து பூ போன்றவற்றை வைத்து சிறப்பு அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு லச்சக்ணக்கான பக்தர்கள் ஆயிரக்கணக்கான லிட்டர் நல்லெண்ணை அபிஷேகம் செய்தார்கள் . பல நூறு கிலோ எள் எரிக்கப்படுகிறது .

இங்கு சனி பகவான் 5 1 /2 அடி உயரத்தில் சுயம்புவாக அருள் பாலிக்கிறார் . இங்கு இவரோடு சிவன் சிலையும் அனுமன் சிலையும் இருக்கிறது . இங்கு பக்தர்களே சனி பகவான் சிலையை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஆனால் பெண்கள் சிலை தொட அனுமதிக்க படுவதில்லை . இந்த கோயிலில் நுழையவே தடை இருந்தது சமீபத்தில் தான் பெண்கள் உள்ளே நுழைய அமைதிக்க பட்டார்கள் . சனி பகவானால் வரும் 7 1/2 சனி , அஷ்டமசனி போன்ற பாதிப்புகளுக்கு இந்த கோயிலில் வந்து சனீஸ்வரனுக்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களை தரும். 

Similar News