கோவிலின் இலவச உணவு, வளர்பு பெற்றோர் என ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சவாலும் வெற்றியும்..

கோவிலின் இலவச உணவு, வளர்பு பெற்றோர் என ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சவாலும் வெற்றியும்..

Update: 2020-04-07 02:27 GMT

"யாரெல்லாம் வெறித்தனமாக இந்த உலகை மாற்ற போகிறேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நம்புங்கள், நிச்சயம் அவர்கள் தான் இதை செய்யக்கூடும். "

அப்படிபட்ட மனிதர்களில் ஒருவர். கணினி, இசை, திரைப்படம், ஸ்மார்ட்போன், டெப்லட் என நீளும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். அவரால் இன்று உச்சம் தொட்டிருக்கும் நிறுவனம் ஆப்பிள். யாரேனும் ஒருவர் கைகளிலாவது ஆப்பிள் நிறுவனபொருட்களை காணமல் உலகின் எந்த பகுதியையும் நாம் கடந்துவிட முடியாது. அவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அவர் பிறந்த தேதி பிப்ரவரி 24.....

ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்வில் நிகழ்ந்த சுவரஸ்யமான சம்பவம்......

ஜொனே மற்றும் அப்துல்பாத்தா என்பவர்கள் தான் ஸ்டீவ் அவர்களின் நிஜ பெற்றோர். ஆனால் அவர்கள் குழந்தையாக இருந்த ஸ்டீவை தத்துகொடுக்க முன்வந்தார்கள். அப்போது பவுல் மற்றும் க்ளாரா என்பவர்கள் தத்தெடுத்து "ஸ்டீவன் பவுல் ஜாப்ஸ்" என பெயரிட்டு வளர்த்தனர். ஸ்டீவின் தந்தை எதை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர். அவருக்கு தன் மகன் ஸ்டீவ் மெக்கானிக்ஸ் துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விருப்பம். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸிற்க்கு அந்த எண்ணம் இருக்கவில்லை. மேலும், எதையும் சரியாக செய்ய வேண்டும் என தந்தையிடமிருந்து கற்று கொண்ட எண்ணம் ஸ்டீவ் ஜாப்ஸை வெகுவாக கவர்ந்திருந்தது. ஒருமுறை ஸ்டீவ் தன் பெற்றோர்களிடம், "மைக்ரோபோன் ஆம்ப்ளிபையர் இல்லாமலேயே வேலை செய்யும்" என்பதை நிருபித்தார். அந்த நொடி முதல் அவரின் அறிவு திறன் பெற்றொராலும் மற்ற அனைவரும் வியந்து பாரட்டபட்டது. எதையும் வித்தியாசமாக செய்து பாரட்டுகளை பெறும் குணம் அன்று துவங்கி அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சவால்கள்

- சிறு வயது முதலே தம்மை வளர்ப்பது வளர்ப்பு பெற்றோர் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அறிந்தே இருந்தார். அவருக்கு தன்னுடைய இயற்பெற்றோரை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் பின்னாளில் தன்னுடைய சுயசரிதையில் தன்னை வளர்த்த பவுல் ஜாப்ஸ் மற்றும் க்ளாரா இவர்கள் தான், 1000% தன்னுடைய பெற்றோர் என்று அழுத்தமாக கூறியுள்ளார்.

- பள்ளி படிப்பை முடித்ததும், ஆரகன் பகுதியில் உள்ள ரீட் கல்லூரியில் (Reed College) மேற்படிப்புக்கு சேர்ந்தார். அந்த கல்லூரியில் படிப்பதற்க்கு அதிக செலவு ஆனது அதை பவுல் மற்றும் க்ளாராவால் ஈடு செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவர்களுடைய வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் கொண்டு, ஸ்டீவை அக்கல்லூரியில் சேர்த்தனர். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த கல்லூரியில் இருந்து ஆறு மாதத்திலேயே வெளியேறினார் ஸ்டீவ். அதற்கடுத்த 18 மாதங்கள் வெவ்வேறு பயிற்சிகள், வகுப்புகளில் இணைந்தார். மீண்டும் ரீட் கல்லூரியில் கற்பிக்கபடுவதை பல சிரமங்களுக்கிடையே தொடர்ந்து கவனித்துவந்தார். அப்போது, நண்பனின் சிறிய அறையில், தரையில் உறங்கியவாறும், வார வாரம் அருகில் இருக்கும் "ஹரே கிருஷ்ணா" கோவிலில் இலவச உணவு வழங்குவார்களாம் அதை உண்டும் தன் வாழ்நாளை கழித்திருக்கிறார்.

- இன்று ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் என் உலகம் உணர்ந்தாலும். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து ஒரு காலத்தில் வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். வெளியேற்றப்பட்ட அடுத்த தருணத்தில், "நெக்ஸ்ட்"(Next) என்ற புதிய நிறுவத்தை துவங்கினார். இவருடைய திறன் இவரை மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியமர்த்தியது.

- தம்முடைய இறுதிகாலத்தில் புற்றுநோயால பாதிக்கபட்டிருந்தார். உடல் அவதிகளையும் ஊக்கத்துடன் எதிர்கொண்ட மகத்தான மனிதர்

உலக புகழ் பெற்ற இவர் படைப்புகள்

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐ போன்

ஆப்பிள் மெக் புக்

என பட்டியல் நீள்வதை போலவே...ஆப்பிள் நிறுவனத்தால் ஓர் பொருள் வெளிவ இருக்கிறது என்ற தகவல் அறிந்தால் போதும். உலகில் மக்கள் கூட்டம் நள்ளிரவென்றும் பாராமல் வரிசையில் நின்று அள்ளி செல்வது இதன் தனி சிறப்பு.

ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி வாசகங்கள்...........

எளிமையாக இருப்பது தான் கடினமானது சிரமமானது. தூய எண்ணங்களை பெறுவதற்க்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்படி கடுமையாக உழைத்து இறுதியில் அந்த இடத்தை நீங்கள் அடைந்துவிட்டால், நீங்கள் மலைகளையே நகர்த்தலாம்.

நான் ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு தான் என் வாழ்வில் எனக்கு நேர்ந்த மிகச்சிறந்த அனுபவம். காரணம், "வெற்றியாளன்" என்ற கணம் கூடியிருந்த தருணத்தை மீண்டும் "முதலில் இருந்து துவங்குபவன்" என்ற மிருதுவான எண்ணம் தடம் மாற்றியிருந்தது.

எல்லோரிடமும் அலைபேசி உள்ளது, ஆனால் யாருக்கும் அவர்கள் வைத்திருக்கும் அலைப்பேசியை மட்டும் பிடிப்பதில்லை. எல்லோரும் விரும்பும்படியான அலைப்பேசியை நான் உருவாக்க வேண்டும்.  

Similar News