கழுகுகளாக மாறிய முனிவர்கள் சாப விமோசனம் பெற்ற அதிசய திருத்தலம்.!

கழுகுகளாக மாறிய முனிவர்கள் சாப விமோசனம் பெற்ற அதிசய திருத்தலம்.!

Update: 2020-08-05 02:27 GMT

புராண காலத்தில் புடா விருத்தா என்ற இரண்டு முனிவர்கள் ஈசனின் சாபம் பெற்று கழுகுகளாக மாறினர். பிறகு ஈசனிடம் மனம் உருகி வேண்டியபோது . "வேதகிரி என்ற மலைக்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் குளித்து என்னை வணங்கினால் சாப விமோசனம் பெறலாம்" சிவபெருமான் கூறினார். அதன் படி இருவரும் கழுகுகளாக மாறி இங்கு வந்து சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். இதனால் இந்த இடத்திற்கு திருக்கழுங்குன்றம் என பெயர் வந்தது.

சென்னையை அடுத்த காஞ்சீபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இன்றும் இந்த மலையின் பாறைகளில் கழுகுகளால் கீறப்பட்ட தடங்கள் ஏராளமாக உள்ளன . 500 அடி உயரமுள்ள இம்மலையில் இப்போதும் உச்சி வேளையில் இரண்டு கழுகுகள் இந்த மலையில் வந்து அங்கு வைக்கப்படும் நெய்வேத்யங்களை உண்டு செல்கின்றன. வேதமே இம்மலையாக உருவானாதால் இந்த இடம் வேதகிரி கதலிவனம் பட்சி தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது .

இந்த மலையை வலம் வருவதால் புத்ரபாக்யத்தை அடையலாம். செவ்வாய், பெளர்ணமி போன்ற விஷேச நாட்களை தொடர்ந்து 48 நாட்கள் இங்கிருக்கும் மலையை வலம் வருவதால் குழந்தை இல்லாதவர்களக்கு குழந்தை பிறக்கிறது

இங்கு ஈசன் வேத கிரீஸ்வரராக அருள் புரிகிறார். கோயில் சன்னிதிக்கு எதிரிலேயே சங்கு தீர்த்தம் என்ற பிரசித்தி பெற்ற தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் அதிசயமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கிறது . இந்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்படுகிறது. மார்கண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இன்றி தவித்த போது இங்கு சங்குகளை உருவாக்கி தந்ததாக புராணம் கூறுகிறது .

இந்த மலைக்கோயிலில் இன்னொரு அதிசயமும் நடக்கிறது தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்கு இறைவனை வழிபடுகிறார் . 1930 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் மிகப் பெரிய இடி ஒன்று கோயில் கலசத்தை தாக்கி அதன் துளை வழியே கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும் அதனால் உருவான தாங்க முடியாத வெப்பம் மறுநாள் காலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்ந்து எல்லா வருடமும் நடக்கிறது பெரிய அதிசயமாகும் .

இத்திருத்தலம் செங்கல்பட்டு திருப்போரூர் கல்பாக்கம் மாமல்லபுரம் ஆகிய இடங்களிலிருந்து 15 கி தொலைவில் உள்ளது 

Similar News