தமிழகத்தில் போலி மருத்துவர்கள் - கிருஷ்ணகிரியில் சிக்கிய இருவர்
எம்.பி.பி.எஸ் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எம்.பி.பி.எஸ் படிக்காமல் கிளினிக் வைத்த மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திமுகம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உள்ளிட்ட கொண்ட மருத்துவ குழுவினர் எம்.பி.பி.எஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து இரண்டு பேரையும் கையும்,களவுமாக பிடித்தனர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த இரு மருத்துவர்கள் நடத்திய கிளினிக் மற்றும் மெடிக்கல் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டன.