ட்விட்டரில் ட்ரெண்டாகும் #FakeidDmk - பெண்களின் போட்டோவை வைத்து எப்படியெல்லாம் நடக்குது மோசடி!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #FakeidDmk - பெண்களின் போட்டோவை வைத்து எப்படியெல்லாம் நடக்குது மோசடி!

Update: 2020-04-17 10:04 GMT

பொய்யான செய்தியை பதிவிட பல போலி பெண் பெயர் ஐடிகள் உருவாக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் தி.மு.க குறித்த தகவல் மட்டும் பரப்பப்படுவது தெரிய வருகிறது.


சமீப காலமாக பெண்கள் பெயரில் தி.மு.க-விற்கு ஆதரவாக சில பதிவுகள் வெளியானதை பரவலாக காண முடிந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லையே என்று தொடர்ச்சியாக பதிவுகள் வெளியாகும் ஒரு சில ஐடிக்களை ஆராய்ந்த பொழுது, அவை பெண்கள் பெயரில் இயக்கப்படும் போலி என்று தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பெண்கள் படங்களை பதிவிறக்கம் செய்து, அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை போலி டிவிட்டர் பக்கம் உருவாக்கவும், பேஸ்புக் ஐ.டி உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ட்விட்டரில் #FackeidDmk, #போலிஐடிதிமுக ஹாஸ் டேக்குகள் வைரலாகி வருகிறது.

ஓசி பிரியாணி தி.மு.க, சி.சி.டி.வி திமுக வரிசையில் #போலிஐடிதிமுக வைரலாகி வருவது உடன்பிறப்புகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



Similar News