ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது : உண்மையை போட்டு உடைத்த ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் - அசிங்கப்பட்ட உடன் பிறப்புகள் #FakeNews

ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது : உண்மையை போட்டு உடைத்த ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் - அசிங்கப்பட்ட உடன் பிறப்புகள் #FakeNews

Update: 2019-07-14 10:53 GMT

"நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்தே பேசினார். அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து, அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிபட்ட தலைவர் மற்ற நாடுகளில் இருந்திருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்", என்று ஐ.நா சபை முன்னாள் பொது செயலாளர் திரு ஜான் எலியாசன் எழுதியுள்ளதாக உடன் பிறப்புகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.



Screenshot from Sundar Nathaman's FB post.


இந்த பதிவை பார்க்கும் போதே, உடன் பிறப்புகள் பரப்பும் வதந்திகளில் இதுவும் ஒன்று என்பது அனைவருக்கும் எளிதில் புரிந்துவிடும். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்து ட்விட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்து, அப்படி ஒரு மனிதரை பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று கூறியுள்ளார்.




https://twitter.com/JanKEliasson/status/1150297066918305792?s=19





ஸ்டாலின், டி.ஆர் பாலு ஆகியோருடன் ஜான் எலியாசன் இருக்கும் புகைப்படம் போட்டோஷாப்பாக இருக்குமோ என்று சற்று தேடிப்பார்த்தால், அது டி.ஆர் பாலு அவர்களின் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிறப்பட்டுள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்.



Screenshot from T.R Baalu website


மு.க ஸ்டாலினை ஜான் எலியாசன் யார் என்றே தெரியாது என்று தற்போது கூறியுள்ள நிலையில், போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை தான் டி.ஆர். பாலு அவர்களின் இணையதளத்தில் பயன்படுத்தி உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, உடன் பிறப்புகள் பரப்பி வந்த வதந்தியை பலரும் கிண்டலடித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.




https://twitter.com/Ethirajans/status/1150307223379202048?s=19




https://twitter.com/SuryahSG/status/1150315083219652609?s=19




https://twitter.com/skarthikdotin/status/1150310403131371520?s=19




https://twitter.com/Uk_Twittz/status/1150318777612947456?s=19


இனிமேலாவது உடன் பிறப்புகள் இணையத்தில் வதந்திகளை பரப்பாமல் இருப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


Similar News